அதேவளை, பிரித்தானியாவின் சகல அரசியல் கட்சிகளையும் சேர்ந்த ஏராளமான பாராளுமன்ற உறுப்பினர்களும் மனித உரிமை செயற்ப்பாட்டாளர்களும் நிகழ்வில் கலந்து கொண்டதுடன், இலங்கை அரசாங்கத்தின் தொடர்ச்சியான மனித உரிமைகள் மீறல்களுக்கு இனியும் இடமளியாமல் முற்றுப்புள்ளி இட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி குரல் கொடுத்திருக்கிறார்கள்.
இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள போர் குற்றச்சாட்டுக்கள் குறித்து சர்வதேச ரீதியான சுயாதீன விசாரணை ஒன்றை துரிதமாக ஆரம்பித்தல், ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்துதல், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பிரித்தானிய வருகையினை தடுத்து நிறுத்துதல் மற்றும் அடுத்த வருடம் இலங்கையில் நடைபெற இருக்கும் பொதுநலவாய நாடுகளின் மகா நாட்டை பிரிட்டன் பகிஷ்கரித்தல் ஆகிய நான்கு விடயங்களை வலியுறுத்தி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
எட் மிலிபான்ட் தனது செய்தியில், இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள போர் குற்றச்சாட்டுக்கள் குறித்து சர்வேதேச ரீதியான சுயாதீன விசாரணை ஒன்றை ஆரம்பிப்பது குறித்த தனது கட்சியின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியதுடன், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் சிபார்சுகளை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் ஐ.நா. வுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், 2013 இல் இலங்கையில் நடைபெற இருக்கும் பொதுநலவாய நாடுகளின் மகா நாட்டை பிரிட்டன் பகிஷ்கரிப்பதற்கு நிர்ப்பந்திக்கப்படும் என்று எச்சரித்தார்.



0 comments:
Post a Comment