Monday, May 28, 2012

மன்னார் ஆயருக்கு எதிரான அச்சுறுத்தல்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கண்டனம்...


ஆயர் இராயப்பு ஜோசப்பின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த கோரியும், அவர் மீதான அச்சுறுத்தல்களுக்கு கண்டித்தும் மன்னார் புனித செபஸ்தியார் தேவாலயத்தில் கண்ட ஒன்றுகூடலொன்று நேற்று இடம்பெற்றிருந்தது.
சிறிலங்காவிலும் தமிழர் தாயகத்திலும் இராணுவ மேலாதிக்க ஆட்சி அதிகாரத்தின் கீழ், சுதந்திரமாக கருத்துக்களை கூறுவதற்கும் உண்மைகளினை வெளிப்படுத்துவதற்கும் அரசியல் அபிலாசைகளை கொண்டிழுப்பதற்கும் அரசியல் அகற்றப்பட்டுள்ள இன்றைய சூழலில், மன்னாரில் முன்னெடுக்கப்பட்டும் சாத்தவீக வழிப்போராட்டங்களுக்கு உலகெங்கும் சிதறிவாழும் தமிழர்கள் யாவரும் தங்கள் ஆதரவினைத் தெரிவித்துக் கொள்கின்றனர் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்தார்.
சிறிலங்காவிலும் தமிழர் தாயகத்திலும் இராணுவ மேலாதிக்க ஆட்சி அதிகாரத்தின் கீழ், சுதந்திரமாக கருத்துக்களை கூறுவதற்கும், உண்மைகளினை வெளிப்படுத்துவதற்கும், அரசியல் அபிலாசைகளை கொண்டிழுப்பதற்கும் அரசியல் அகற்றப்பட்டுள்ள இன்றைய சூழலில் மன்னாரில் முன்னெடுக்கப்பட்டும் சாத்தவீக வழிப்போராட்டங்களுக்கு, உலகெங்கும் சிதறிவாழும் தமிழர்கள் யாவரும் தங்கள் ஆதரவினைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.
தமிழர் தாயகத்தினுள்ளும் சிறிலங்காவிலும் இந்து, இஸ்லாமிய மத சுதந்திரத்துக்கும் வழிபாட்டு உரிமைக்கு எதிராகவும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள சிங்கள பௌத்த இனவாதிகளின் செயல்களுக்கு எதிராக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், எமது புதிய போர்களம், தமிழர் வாழும் தேசங்கள் என்ற அடிப்படையில் உலகலாவிய ரீதியில் விழிப்புணர்வுப் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளது.





0 comments:

Post a Comment