இந்த த்ரில்லர் படத்தில் பூனம் கவுர் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்.
இப்படம் குறித்து இயக்குனர் மதிவாணன், வதம் படத்தில் நாயகன் என்று யாரும் கிடையாது. பூனம் வலுவான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
எழுத்தார்வம் மிக்க இளம் பெண்ணாக அவர் வருகிறார். எந்த சூழ்நிலையிலும் ஒரு பெண்ணால் உறுதியாக நின்று எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணமாக இப்படத்தில் இருப்பார்.
சமீபத்தில் கொடைக்கானலில் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம். படத்துக்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். அபு ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்தில் இயக்குனர் வெங்கடேஷ், ஜான் விஜய், மகேந்திரன், பாய்ஸ் மணிகண்டன், எம்.எஸ்.பாஸ்கர், பேபி வர்ஷா மற்றும் பலர் நடித்துள்ளார்கள் என்று கூறியுள்ளார்.











0 comments:
Post a Comment