
குறித்த தீப்பரவல் தற்போது கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எரிபொருள் பௌசர் ஒன்றிலிருந்து நிரப்பு நிலையத்தில் உள்ள தாங்கிக்கு எரிபொருள்களை மாற்றிய தருணத்திலேயே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.
தீப்பரவல் காரணமாக பௌசரின் முன்பகுதி சேதமடைந்துள்ளதாகவும், அருகில் இருந்து பிறிதொரு வாகனத்தின் பின்பகுதி சிறியளவில் பாதிப்படைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மாநகர சபை தீயணைப்பு படையினர் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு தீயிணை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததன் காரணமாக பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதன்போது, உயிர்ச்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
இருந்த போதும், தெஹிவளை எரிபொருள் நிலையத்தில் திடீர் தீப்பரவல் ஏற்பட்டமைக் காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் காரியாலயம் தகவல் வெளியிட்டுள்ளது.

0 comments:
Post a Comment