Tuesday, May 1, 2012

அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வை முன்வைத்தால் புலம்பெயர் மக்களின் உதவிகள் அதிகரிக்கும்: இரா.சம்பந்தன்...




தமிழ் மக்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு வழங்கப்பட்டு, எமது மக்களின் துயரங்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக இவ்வரசாங்கம் செயற்பட்டு, தமிழ் மக்கள் மீது அக்கறையின்றி செயற்படுவதாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். யாழ். குருநகர் சென்றோக்ஸ் மைதானத்தில் இன்று நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில், இரா.சம்பந்தன் தொடர்ந்து உரையாற்றுகையில்,
இனப்பிரச்சினைக்கு நிரந்த தீர்வு காண்பதற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் பூரண ஒத்துழைப்பை வழங்க தயாராகவுள்ளன. அத்துடன் எமது மக்கள் பெறும் துன்ப, துயரங்கள் மற்றும் கஷ்டங்களும் எங்களுக்கு தெரியும். இதனால், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உதவியுடன் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு இலகுவாக தீர்வு கண்டிருக்க முடியும்.






 


 


 


 


 


 


 


 


 


 





 


 


 


 





0 comments:

Post a Comment