Monday, May 14, 2012

ஸ்ரீலங்கா பிறீமியர் லீக் தொடரில் இந்திய வீரர்கள் பங்கேற்க வாய்ப்பு உள்ளது: பி.சி.சி.ஐ...

எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் நடைபெறவுள்ள ஶ்ரீலங்கா பிறீமியர் லீக் தொடரில் இந்திய வீரர்கள் விளையாடுவதற்கான வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளது என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய  (பி.சி.சி.ஐ) தலைவர் என். ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இந்தியக் கிரிக்கெட் வீரர்களையும் தாண்டி, இந்திய நிறுவனங்களில் முதலீடு, அனுசரணை ஆகியவற்றை இலங்கைக் கிரிக்கெட் வாரியம் நம்பியிருந்த நிலையில், இந்தியக் கிரிக்கெட் வாரியத்தின் மறுப்பினை அடுத்து அந்நிறுவனங்களும் பின்வாங்கிக் கொண்டதால் இலங்கைக் கிரிக்கெட் வாரியம் கடந்த வருடம் ஶ்ரீலங்கா பிறீமியர் லீக்கை நிறுத்தி வைத்தது.

0 comments:

Post a Comment