தென்கிழக்கு துறைமுகத்தில் 6 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தொகுதியின் 3ஆவது மாடியிலுள்ள 28 களியாட்ட விடுதி அறைகளில் ஒரு அறையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற வெடிப்பைத் தொடர்ந்து புகை பரவ ஆரம்பித்ததாகவும் இதன்போது மக்கள் பதற்றமாக காணப்பட்டதாகவும் பொலிஸாரும் சம்பவத்தை நேரில் கண்டவர்களும் குறிப்பிட்டுள்ளனர்.
பலியானவர்களில் 7 ஆண்களும் 2 பெண்களும் அடங்குவதாகவும் இவர்கள் நச்சுவாயுவை சுவாசித்ததன் காரணமாகவே பலியானதாகவும் பொலிஸார் கூறினர். குறித்த களியாட்ட விடுதியில் 3 கொரியர்களுடன் இணைந்து பணியாற்றிய 3 இலங்கைத் தொழிலாளர்களே பலியாகியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையிலிருப்பதாகவும் இருப்பினும் ஏனையவர்கள் உயிராபத்தை எதிர்நோக்கவில்லையெனவும் பொலிஸார் கூறினர்.
புகைப்பிடிக்கும்போது அதனை மக்களால் அவதானிக்க முடியவில்லையெனவும் இதனாலேயே பாரிய இழப்புக்கு வழிவகுத்ததெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment