Monday, April 30, 2012

பிரமபுத்திரா நதியில் 300 பேருடன் சென்ற படகு கவிழ்ந்தது: 40 சடலங்கள் மீட்பு, 100 பேர் பலி...(வீடியோ இணைப்பு)




அஸாம் மாநிலத்தின் பிரமபுத்திரா நதியில் சுமார் 300 பேருடன் பயணம் செய்துகொண்டிருந்த படகொன்று கவிழ்ந்ததில் 40 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இதில் 25 பேர் தண்ணீரில் நீந்தி பத்திரமாக உயிர் தப்பியுள்ளனர். மற்ற நபர்கள் குறித்த விபரம் இது வரை கண்டறியப்படவில்லை. 100 பேர் இறந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அம்மாநிலத்தில் துணை ஆணையர் குமுத் சந்திரா கலிதா கூறுகையில், படகானது துப்ரிகாத் என்ற இடத்தை கடக்கும் போது இன்று மாலை இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்தார்.
இரட்டை அடுக்குகள் கொண்ட இப்படகு கடும் காற்று, மழைக்கு மத்தியில் பிரமபுத்திரா நதியில் பயணம் செய்துகொண்டிருந்த போது கவிழ்ந்துள்ளது.
சுமார் 35 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அஸாம் மாநில பொலிசார் எல்லை பாதுகாப்பு படையினர்களின் உதவியுடன் மீட்பு பணிகளில் விரைவாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்திய பிரதமர் மன்கோகன் சிங் இச்சம்பவம் தனக்கு மிகவும் அதிர்ச்சியளிக்கிறது, என்னுடைய மிகுந்த இரக்கங்களையும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
பிரமபுத்திரா நதியில் இது போன்ற விபத்து நடந்திருப்பது இதுவே முதல் முறையாகும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளும், நிவாரனங்களும் முழுமையாக வந்து சேரும் என உறுதியளித்துள்ளார்.






0 comments:

Post a Comment