குறிப்பாக 2008, 2009 காலப்பகுதியில் பிரித்தானிய தமிழ் மக்களை அணிதிரட்டி மேற்கொண்ட எழுச்சி மிக்க கூட்டங்கள், ஊர்வலங்களில் இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டது சர்வதேசத்தின் கவனத்தினை ஈர்த்தது. 2009 மே முள்ளிவாய்க்காலின் பின்னர் பிரித்தானிய தமிழ் மக்களை தட்டியெழுப்பி சோர்வடையாது செயற்பட்டுவருகிறது.
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின் இராணுவக்கட்டுப்பாட்டு பகுதியில் முள்வேலி முகாம்களுக்குள் அடைத்துவைத்த மக்களை விடுதலைசெய்யக்கோரி "திறப்பு" (Unlock the camps) பரப்புரை போராட்டமும் அதன் பின் இராணுவத்தால் அரசியல் கைதியாக பிடிக்கப்பட்டவர்களை "அரசியல் கைதிகள் இப்போதும் உயிருடன் இருக்கிறார்களா?" ( Are they alive?) என்ற பரப்புரைப் போராட்டமும் அதனைத்தொடந்து "சர்வதேச சுயாதீன விசாரணை" (III) international independent investigation உருவாக்குவதற்கான பரப்புரைப் போராட்டங்களையும் மேற்கொண்டு வரும் பிரித்தானிய தமிழர் பேரவை தாயக மக்களின் நெருக்கடிகளை அறிந்து அவர்களின் விடிவுக்கான போராட்டத்தினை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.
இவற்றின் மூலம் இன்று சர்வதேச சமூகங்களும், கொள்கைவகுப்பு தளங்களும் மற்றும் மனித உரிமை அமைப்புகளும் பிரதான ஊடகங்களும் சிறி லங்கா அரசுக்கு அழுத்தங்களை பிரயோகிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. புலம்பெயர் தமிழ் மக்களின் உணர்வுகளை ஒருமுகமாக வலுப்படுத்தி மேற்கொள்ளப்படும் போராட்டங்களும், அதனூடாக அனைத்துலக சமூகங்களுக்கு கொண்டுசெல்லும் காத்திரமான அழுத்தங்களுமே ஈழத்தமிழ் மக்களின் விடுதலைக்கான பாதையை திறந்துவிடும். அதனடிப்படையில் கடந்த இரண்டு வருடங்களாக முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு கூரல் நிகழ்வுகளை சர்வதேச சமூகங்களால் திரும்பிப்பார்க்கும் வகையிலும், சர்வதேச சமூகம் ஈழத்தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் வகையிலும் மிகவும் எழுச்சியாகவும் சிறப்பாகவும் அனைத்து பொது அமைப்புக்களையும் மற்றும் அனைத்து ஊடகங்களையும் உள்வாங்கி நினைவு கூர்ந்தமை யாவரும் அறிந்ததே.
இது தொடர்பான மேலதிக விவரங்களுடன் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் மூன்றாம் ஆண்டு நினைவுகூரல் நிகழ்வுகளை ஒழுங்கமைப்பதற்குமான கலந்துரையாடல் 26/04/2012 வியாழக்கிழமை 19:00 மணி தொடக்கம் 21:00 மணிவரை Lewisham சிவன் கோவில் மண்டபத்தில், 4A Clarendon Rise, London, SE13 5ES. என்னும் இடத்தில் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.
ஆர்வமுள்ள அனைத்து மக்களையும், மக்கள் அமைப்புக்களையும், ஊடகவியலாளர்களையும் மற்றும் பாடசாலைகள், தொண்டு நிறுவனங்கள் போன்ற அனைவரையும் கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
பிரித்தானிய தமிழர் பேரவை
0208 808 0465

0 comments:
Post a Comment