Monday, April 9, 2012

ஒரு கல் ஒரு கண்ணாடி - இசை வெளியீடு

உதயநிதி ஸ்டாலின் நாயகனாக அறிமுகமாகும் படம் 'ஒரு கல் ஒரு கண்ணாடி'. சந்தானம், ஹன்சிகா, சரண்யா மற்றும் பலர் நடித்து இருக்கிறார்கள். ஆர்யா, சினேகா, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் கெளரவ வேடத்தில் நடித்து இருக்கிறார்கள்.

ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைக்க, ராஜேஷ் இயக்கி இருக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் 'எங்கேயும் காதல்' படத்தினை அடுத்து வெளிவர இருக்கும் முழுநீள காதல் கதை 'ஒரு கல் ஒரு கண்ணாடி'

படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் வேளையில் 26ம் தேதி சென்னையில் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது.

உதயநிதி ஸ்டாலின் நண்பர்களான சூர்யா, கார்த்தி, ஜீவா, ஆர்யா மற்றும் பலர் இந்த இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தின் 3 நிமிட டிரெய்லர் மற்றும் பாடல்களை இந்த இசை வெளியீட்டு விழாவில் ஒளிபரப்ப தீர்மானித்து இருக்கிறார்கள்.

0 comments:

Post a Comment