Saturday, April 21, 2012

ஊடகத்தினருக்காக திரையிடப்பட்ட 'ஊ.ல.ல.லா' படம்...


மார்ஷல் பவர் மீடியா படக்கம்பெனி தயாரித்துள்ள 'ஊர்வசி லதா லலிதா லாவண்யா' திரைப்படம், ஊடகத்தினருக்காக சென்னை 4 ஃ பிரேம்ஸ் தியேட்டரில்  திரையிடப்பட்டது. 
இப்படத்தில் நாயகனாக ஜோதி கிருஷ்ணா, நாயகியாக திவ்யா பண்டாரி இணைந்து நடித்துள்ளார்கள். இவர்களுடன் தலைவாசல் விஜய், சேகர் பிரசாத், கஞ்சா கருப்பு மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.
படத்துக்கு சேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். சேகர் சந்திரா இசையமைத்துள்ளார். சேகர் பிரசாத் வசனமும், திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் ஏ.எம்.ஜோதிகிருஷ்ணா.
ஒரு பெண்ணை காதல் செய்து கொண்டே பல இளசுகளுக்கு 'ரூட்டு' விடும் ஜாலி ரோமியோவின் கதையை படமாக்கியுள்ளார்கள்.
படத்தை இயக்கிய ஜோதிகிருஷ்ணா நாயகனாக திவ்யா பண்டாரியுடன் இணைந்து நடித்துள்ளார். நகைச்சுவை நண்பன் சேகர் பிரசாத்துடன் பைக்கில் சவாரி செய்து, பல இளசுகளுக்கு தூண்டிலை வீசுகிறார் ஜோதி கிருஷ்ணா.
இவரை உருகி, உருகி காதலிக்கிறார் நாயகி திவ்யா பாண்டே. இருவரும் முத்தமிடும் காட்சி அலைபேசி வழியே ஊரெல்லாம் தெரியவருகின்றது.

0 comments:

Post a Comment