Saturday, April 21, 2012

டெல்லி பெல்லி தமிழ் ரீமேக்கில் ஹன்சிகா...


அதிகமாக ஆட்டம் போடுவது பிடிக்காத எனக்கு, என்னுடைய நிலை தெரியும் என்கிறார் ஹன்சிகா மோத்வானி.
இதுகுறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், டெல்லி பெல்லி என்ற இந்தி படம் தமிழில் ரீமேக் ஆகிறது. இந்த படத்தில் நான் நடிக்கிறேன். கண்ணன் இயக்குகிறார்.
இந்தியில் இப்படம் கடும் விமர்சனங்களுக்கு ஆளானது. இதில் இடம் பெற்ற வசனங்கள் கடுமையாக இருந்தது. அதுபோல் வசனங்கள் பேசி நடிப்பீர்களா என்கிறார்கள்.
சினிமாவில் என் நிலை எனக்கு தெரியும். அதிகமாக பேசுவது, ஆட்டம் போடுவது எனக்கு பிடிக்காது.
இந்தியில் கடுமையான வசனங்கள் இருந்தாலும் தமிழுக்கு ஏற்றபடி அந்த வசனங்களை இயக்குனர் மாற்றி இருக்கிறார்.
அதை கேட்ட பின்பு தான் நடிக்க ஒப்புக்கொண்டேன். இந்தியில் இம்ரான்கான் ஏற்று நடித்த வேடத்தை தமிழில் ஆர்யா ஏற்றிருக்கிறார்.

0 comments:

Post a Comment