Sunday, April 22, 2012

மே மாதம் வெளியாக தயாராகும் விஷாலின் சமரன்...

நாயகன் விஷாலுடன் முதன் முறையாக திரிஷா இணைந்து நடிக்கும் சமரன் படம் மே வெளியாக ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
விஷால் நடித்த தீராத விளையாட்டு பிள்ளை திரைப்படத்தை இயக்கிய திரு மீண்டும் விஷாலை வைத்து சமரன் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தில் முதன் முறையாக விஷாலுடன் திரிஷா இணைகிறார். இரண்டாவது நாயகியாக அனன்யாவும் நடிக்கிறார். மேலும் முக்கியமான கதாப்பாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார்.
மேலும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ஒஸ்தி திரைப்படத்தை தயாரித்த பாலாஜி ரியல் மீடியா தயாரிக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்புகள் ஊட்டி மற்றும் தாய்லாந்தில் நடத்தியுள்ளனர். தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் இப்படத்தை மே மாதத்தில் வெளியிட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

0 comments:

Post a Comment