Sunday, April 15, 2012

யாழ் சுண்டுக்குழி-பாண்டியந்தாழ்வு பகுதியில் கோர விபத்து.இருவர் சம்பவ இடத்திலேயே பலி.

குறித்த பகுதியைச்சேர்ந்த எஸ்.பிராபா சு.மயூ என்ற இரு குடும்பஸ்தர்களே சம்பவத்தில் பலியாகியுள்ளனர். இவர்கள் இருவரும் தமது மோட்டார் சைக்கிளில் அதிகவேகத்தில் சென்றதாகவும் இதன்போது வீதில் ஏற்பட்ட சறுக்கலால் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதுண்டு விபத்திற்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். இதேவேளை குறித்த இருவரும் விபத்திற்குள்ளாகியிருந்த சமயம் அம்புலன் உதவி மற்றும் வாகன உதவியை மக்கள் கோரியிருந்த போதும் உதவி கிடைக்கவில்லை.
இதனாலேயே குறித்த உயிரிழப்பு ஏற்பட்டதாக பிரதேச மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.






0 comments:

Post a Comment