Saturday, April 28, 2012

செங்கல்பட்​டு முகாமில் உள்ள ஈழத்தமிழர்களுக்கு இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுங்கள்: தமிழக முதல்வருக்​கு கடிதம்...


என்பதை சுட்டிக்காட்டி, மனவிரக்தியுடன் அவல வாழ்வு வாழும் இவர்களை மனிதநேயத்தோடு விடுதலை செய்து அவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு வழிசமைத்துக்கொடுக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு பிரித்தானியத் தமிழர் ஒன்றியத்தினால் புலம்பெயர்வாழ் தமிழர்கள் சார்பில் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் இலங்கை சென்று திரும்பிய இந்திய பாராளுமன்றக் குழுவில் இருந்து தங்களது பாராளுமன்ற உறுப்பினர்களை நீங்கள் முதலில் விலக்கியதோடு தங்களின் ஆளுமையூடாக சிறீலங்கா அரசினதும் இந்திய மத்திய அரசினதும் உண்மை நிலையை சரியாகப் புரிந்து செயற்பட்டமையானது தங்கள் மேல் உள்ள நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
தங்களின் விடுதலைக்காக மூன்று தடவைகளுக்கும் மேல் உண்ணாநிலை போராட்டத்தை மேற்கொண்டும் விடுதலைசெய்வதாக பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்த நிலையிலும் இன்றுவரை விடுதலை செய்யாது ஏமாற்றப்பட்டு வருகிறோம் என்ற மனவிரக்தியுடன் அவல வாழ்வு வாழும் இவர்கள் விடையத்திலும் நீங்கள் மனிதநேயத்தோடு செயற்பட்டு, தொடரும் அவர்களின் உண்ணாநிலைப் போராட்டத்தை நிறுத்தி, அவர்களை விடுதலை செய்து இயல்பு வாழ்க்கைக்கு வழிசமைத்துக் கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையோடும் புலம்பெயர் தமிழ் மக்கள் சார்பில் வேண்டிநிற்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



0 comments:

Post a Comment