Sunday, April 22, 2012

அழகி என நினைத்து கொள்ளைக்கும்பலிடம் பணத்தை பறிகொடுத்த லொரி ஓட்டுநர்....


நள்ளிரவில் டார்ச் லைட் அடித்து அழைக்க அழகி என்று நினைத்து லொரியில் இருந்து இறங்கிச் சென்ற ஒட்டுநர் மீது தாக்குதல் நடத்தி அவரிடமிருந்த ரூ.14 ஆயிரத்தை கொள்ளைக் கும்பல் ஒன்று பறித்துச் சென்றது.
கன்னியாகுமரி மாவட்டம் வேம்பனூர் அருகே உள்ள பரம்புவிளையை சேர்ந்த ஜெயக்குமார் (வயது 43) லொரி ஒட்டுநராக பணியாற்றி வருகிறார்.
இவர் நேற்று நள்ளிரவில் திருச்சியில் இருந்து மணல் ஏற்றிக்கொண்டு திருநெல்வேலி நோக்கி சென்றுகொண்டிருந்தார்.
மதுரை திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடியில் லொரி சென்று கொண்டிருந்த போது சாலையோரத்தில் டார்ச் லைட் வெளிச்சம் தென்பட்டது.
இதைப்பார்த்த ஜெயக்குமார் பாலியல் தொழிலில் ஈடுபடும் அழகிகள் தான் அழைக்கிறார்கள் என்று நினைத்து லொரியை நிறுத்தி இறங்கிச் சென்றுள்ளார்.
இருட்டுப் பகுதிக்குள் சென்றபோது திடீரென அங்கு 3 பேர் கொண்ட கும்பல் உருட்டுக் கட்டையால் சரமாரியாக ஜெயக்குமாரை தாக்கினர்.
இதில் நிலைகுலைந்த அவரிடம் இருந்து ரூ.14 ஆயிரம் பணத்தை பறித்துக்கொண்டு அந்த கொள்ளைக்கும்பல் தப்பி ஓடிவிட்டது.

0 comments:

Post a Comment