
வடக்கு அட்லாண்டிக் கடல் பகுதியில் விபத்துக்கு உள்ளான டைட்டானிக் கப்பலின் உடைந்த பாகங்கள் யுனெஸ்கோவின் கட்டுப்பாட்டிற்குள் வரவுள்ளன.
உலகப் புகழ் பெற்ற பயணிகள் சொகுசு கப்பலான டைட்டானிக், கடந்த 1912ம் ஆண்டு முதல் ஏப்ரல் மாதம் 14ம் திகதி வடக்கு அட்லாண்டிக் கடலில் பனிப்பாறையில் மோதி மூழ்கியது.
இரண்டு துண்டாக உடைந்த கப்பலின் பாகங்கள் கடலுக்கு அடியில் 4,000 மீட்டர் ஆழத்தில் கிடக்கின்றன.
சர்வதேச கடல் எல்லையில் இருப்பதால் இதற்கு எந்த நாடும் உரிமை கோர முடியாது. மேலும் கடலுக்கடியில் புதைந்த, மூழ்கிய கலாச்சார சின்னங்கள், பொருட்களை குறைந்தது 100 ஆண்டுகள் கழித்து தான் உரிமை கொண்டாட முடியும்.
அந்த வகையில் ஐ.நா.வின் கல்வி, அறிவியல், கலாச்சார அமைப்பு(யுனெஸ்கோ) டைட்டானிக் கப்பலில் இருந்த கலை நயமிக்க பொருட்கள், கலாச்சார சின்னங்களை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர உள்ளது. வரும் 14ம் திகதியுடன் டைட்டானிக் கப்பல் மூழ்கி 100 ஆண்டுகள் நிறைவடைவது குறிப்பிடத்தக்கது.




0 comments:
Post a Comment