Saturday, April 7, 2012

மலாவியின் புதிய ஜனாதிபதியாக ஜாய்ஸ் பாண்டா தெரிவு



மலாவி ஜனாதிபதி பிங்கு வா முத்தாரிகா இறந்ததை தொடர்ந்து, ஜாய்ஸ் பாண்டா புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்க உள்ளார்.
தென் கிழக்கு ஆப்ரிக்க நாடான மலாவியின் ஜனாதிபதி பிங்கு வா முத்தாரிகா(வயது 78). இரண்டு நாட்களுக்கு முன்பு இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால், தென் ஆப்ரிக்காவுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.
அவர் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனாலும் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக மலாவி அரசு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இதனால் குழப்பம் நிலவி வந்தது.
இந்நிலையில் பிங்கு இறந்து விட்டதாக மலாவி அரசு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து புதிய ஜாய்ஸ் பாண்டா பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
துணை ஜனாதிபதியாக இருந்த இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஜனநாயக மக்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் இவருக்கு ஜனாதிபதி பதவி கிடைக்காது என தகவல் வெளியாகியது.
இந்த பிரச்னையை சுமூகமாக தீர்க்கும்படி, மலாவி அரசுக்கு அமெரிக்கா, பிரிட்டன் நாடுகள் அறிவுறுத்தின. இதனையடுத்து ஜாய்ஸ் பாண்டா புதிய ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார்.

0 comments:

Post a Comment