Saturday, April 7, 2012

ஊருக்குள் புகுந்து கங்காரு அட்டகாசம்



ஜேர்மனியில் சர்க்கஸ் குழுவில் இருந்து தப்பி ஓடி வந்த கங்காரு ஒன்று திடீரென்று ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்தது.
ஜேர்மனி நாட்டில் உள்ள ரோடன்பர்க் நகரில் சர்க்கஸ் குழுவினர் முகாமிட்டிருந்தனர்.
அங்கிருந்த கங்காரு ஒன்று தப்பி திடீரென்று ஊருக்குள் புகுந்து, முக்கிய சாலையில் வாகனங்களுக்கு இடையே அங்கும் இங்குமாக ஓடியது.
இதுமட்டுமல்லாமல் கார்களுக்கு மேல் தாவி குதித்ததால், போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனை அறிந்ததும் சர்க்கஸ் பயிற்சியாளர்கள், காவல்துறை அதிகாரிகள், வனவிலங்கு காப்பக நிபுணர்கள் இந்த பகுதிக்கு விரைந்து வந்தனர்.
இவர்களுக்கு சற்றுநேரம் விளையாட்டு காட்டிய கங்காரு ஒரு சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்து அங்குள்ள கார் பார்க்கிங் பகுதியில் பதுங்கி கொண்டது.
அதன்பிறகு கங்காருவை பிடித்து சர்க்கஸ் கூடாரத்துக்கு மீண்டும் கொண்டு சென்றனர். இந்த கங்காரு கடும் சேட்டை செய்தாலும் யாருக்கும், எந்தவித தொந்தரவும் கொடுக்கவில்லை என காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment