Tuesday, April 10, 2012

குப்பையில் வீசப்படும் செல்போன்களில் 900 கிலோ தங்கம்! சம்பாதிக்கலாம் பல கோடி

cell-phone-landfills
இது உண்மையிலேயே அதிர்ச்சி தரக் கூடிய செய்தி தான். உலகம் முழுவதிலும் இருந்து 40 கோடிக்கும் அதிகமான செல்போன்கள் ஒவ்வொரு ஆண்டும் குப்பையில் வீசப்படுகின்றன்வாம்.
இந்தியாவில் மட்டும் நான்கு கோடி செல்போன்கள் ஆண்டு தோறும் குப்பையில் கொட்டப்படுகின்றன.
குப்பையில் வீசப்படும் செல்போன்களில் இருந்து 900 கிலோ தங்கம், 18000 கிலோ வெள்ளியைப் பிரித்து எடுக்க முடியும் என்று புதிய அதிர்ச்சி கலந்த செய்தியை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு செல்போனிலும் 0 .01 வீதம் தங்கம், 40 சதவீதம் மறுசுழற்சி செய்யக் கூடிய பிளாஸ்டிக் மற்றும் வெள்ளி என்பன அடங்கியுள்ளது.
ஒரு டன் செல்போன் குப்பையில் 150 கிராம் தங்கமும், 3 கிலோ வெள்ளியையும் பிரித்தெடுக்க முடியும்.
நாளுக்கு நாள் வந்து கொண்டிருக்கும் புதிய வரவுகளால் பழைய செல்போன்கள் குப்பைக்குள் போய் விடுகின்றன.
குப்பையில் வீசக் கூடிய செல்போன்களை திட்டமிட்டு மறுசுழற்சிக்கு உட்படுத்தினால் பலகோடி ரூபாய்கள் சம்பாதிக்க முடியும்

0 comments:

Post a Comment