Saturday, April 21, 2012

ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கினார் இயக்குனர் ஷங்கர்...


கொலிவுட் இயக்குனர் ஷங்கர் சொகுசு ஆடம்பரக்காரான ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கியுள்ளார்.
கொலிவுட்டின் பிரமாண்ட இயக்குனர் என்ற புகழுக்கு இயக்குனர் ஷங்கர் சொந்தக்காரர் ஆவார்.
தன்னுடைய படங்களை மிகவும் பிரமாண்டமான முறையில் அதிக பொருட் செலவுடன் எடுப்பார்.
இதேவகையில் தானும் பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்று எண்ணி ரோல்ஸ் ராய்ஸ் ஆடம்பர சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
இதன் மூலம் தமிழ்நாட்டில் முதன்முறையாக ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு சொந்தமானவர் என்ற பெயரை பெற்றுள்ளார்.
இந்தியாவில் இந்தக் கார் சில முக்கிய பிரபலங்களிடம் மட்டும் தான் உள்ளது. குறிப்பாக அமிதாப் பச்சன், அமீர் கான், சஞ்சய் தத்தின் மனைவி மான்யதா, தயாரிப்பாளர் வினோத் சோப்ரா ஆகியவர்களிடம் மட்டும் தான் உள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment