Saturday, April 21, 2012

தமிழர்கள் கோரிக்கைகளை செய்து தருவதாக மஹிந்த ராஜபக்ச உறுதி...


இந்திய நாடாளுமன்றக் குழுவினர் இன்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ராஜபக்சவை சந்தித்து விட்டு வெளியே வந்த சுஷ்மா சுவராஜ் ஊடகத்தினர் சந்திப்பில், இலங்கை வடக்கு, கிழக்கு, தெற்கு மாகாணங்களில் மக்கள் கூறிய கருத்துக்களை ராஜபக்சவிடம் கூறியதாகவும், அவற்றை எல்லாம் உடனடியாக சரி செய்வதாக ராஜபக்ச உறுதி அளித்தாகவும் கூறினார்.
மேலும், இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை அளிக்கும் 13வது அரசியல் சட்ட திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று நாடாளுமன்றக் குழு வைத்த கோரிக்கையை நிறைவேற்றுவதாகவும் ராஜபக்ச கூறியதாக சுஷ்மா தெரிவித்தார்.
தமிழர்கள் வாழும் பகுதிகளில் ராணுவத்தின் நடமாட்டத்தைக் குறைத்துக் கொள்ளுமாறும் நாடாளுமன்றக் குழு கூறியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற இந்த சந்திப்பை முடித்துக்கொண்டு நாடாளுமன்றத் தூதுக்குழுவினர் இன்று மாலை இந்தியா வந்தனர்.

0 comments:

Post a Comment