Sunday, April 22, 2012

பிரியங்காவை தோழியாக ஏற்க மறுத்த இலியானா...


பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, எனக்கு தோழி இல்லை என்று நண்பன் நாயகி இலியானா கூறியுள்ளார்.
கொலிவுட்டில் நண்பன் படத்தில் நடித்த இலியானா, தற்போது பாலிவுட்டில் தஞ்சமடைந்துள்ளார்.
பாலிவுட்டில் “பர்பி” என்ற படம் மூலம் அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் பிரியங்கா சோப்ராவும் உள்ளார்.
இந்நிலையில் இலியானாவுக்கும் பிரியங்காவுக்கும் இடையே பிரச்சினை வெடிப்பதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வந்தன.
இதை பிரியங்கா மறுத்ததோடு இலியானா ரொம்ப அழகான, திறமையான பொண்ணு என்று சொல்லி இந்த விடயத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.

0 comments:

Post a Comment