Sunday, April 22, 2012

ரசிகர் மன்றம் குறித்து விரைவில் அறிவிப்பேன்: உதயநிதி...


தனது அடுத்தபடம் திரைக்கு வந்தது ரசிகர் மன்றம் குறித்து விரைவில் அறிவிக்க உள்ளதாக நாயகன் உதயநிதி கூறியுள்ளார்.
கொலிவுட்டில் உதயநிதி நடித்து வெளிவந்துள்ள “ஒரு கல் ஒரு கண்ணாடி” திரைப்படம் திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டுக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தமிழ்நாடு மதுரையில் நிருபர்களை சந்தித்து உதயநிதி பேட்டியளித்தார்.
தனது பேட்டியில், நடிகர் சந்தானத்துடன் அடுத்தடுத்த படங்களில் நடிப்பேன் என்றும் அவருடன் நகைச்சுவை கலந்த கதாப்பாத்திரங்களில் நடிப்பதே தனக்கு பொருந்தும் எனவும் கூறினார்.
தற்போது இளையதளபதி விஜய்யை வைத்து படம் எதுவும் தயாரிக்கவில்லை. அவருக்கும், எனக்கும் திகதிகள் ஒத்து வந்தால் விஜய்யை வைத்து படம் தயாரிப்பேன் என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment