Sunday, April 22, 2012

தி டர்ட்டி பிக்சர்ஸ் படத்தை இரவில் ஒளிபரப்ப அனுமதி...


தேசிய விருது பெற்ற “தி டர்ட்டி பிக்சர்ஸ்” படத்தை இரவு 11 மணிக்கு மேல் ஒளிபரப்பலாம் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாலிவுட்டில் வெளியான “ தி டர்ட்டி பிக்சர்ஸ்” படத்தில் நாயகி வித்யா பாலன் நடித்துள்ளார்.
மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையே இப்படத்தின் திரைக்கதையாகும்.
இந்நிலையில் “தி டர்ட்டி பிக்சர்ஸ்” படத்தை இன்று மதியம் தனியார் தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்ப இருந்ததாக தெரிவித்திருந்தது.
இதற்கு தடை விதித்த மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம், இப்படத்தை இரவு 11 மணிக்கு மேல் ஒளிபரப்ப அத்தொலைக்காட்சிக்கு அனுமதி வழங்கியுள்ளது.
நாயகி வித்யா பாலன் இப்படத்தில் கவர்ச்சியாக நடித்துள்ளதன் காரணமாக மதிய நேரத்தில் ஒளிபரப்ப மத்திய அமைச்சகம் தடை விதித்திருந்தது.

0 comments:

Post a Comment