Monday, April 2, 2012

தமிழ் நாட்டில் விசேட பயிற்சி பெற்ற 150 புலிகள் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்குள் ஊடுருவல்!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் 150 பேர் இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தில் இருந்து இலங்கைக்குள் ஊடுருவி உள்ளார்கள் என்று தேசிய புலனாய்வுத் துறை வட்டாரங்களில் இருந்து தெரிய வந்து உள்ளது.
இவர்கள் தமிழ் நாட்டில் மிகவும் இரகசியமான முறையில் இயங்கிய மூன்று பயிற்சி முகாம்களில் விசேட பயிற்சிகள் பெற்றவர்கள் என்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்குள் உட்பிரவேசித்து உள்ளார்கள் என்றும் அதிரடித் தாக்குதல்களை நடத்த தக்க நேரம் பார்த்து காத்திருக்கின்றார்கள் என்றும் அறிய வந்து உள்ளது.திருகோணமலை கடந்த வாரம் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டார். இப்படுகொலையை மேற்கொண்டமைக்காக மூவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றார்கள்.இம்மூவரும்கூட தமிழ் நாட்டில் பயிற்சி பெற்ற புலிகள் குழுவைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்களிடம் இருந்தே புலனாய்வுப் பிரிவினருக்கு மேற்சொல்லப்பட்ட அதிர்ச்சித் தகவல்கள் கிடைக்கப் பெற்றன என்றும் தெரிகின்றது.தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட பின்பு இக்குழுவினர் இந்தியாவுக்கு தப்பி சென்று இருக்கின்றனர். தமிழ் நாட்டில் இரகசிய இடங்களில் விசேட பயிற்சிகள் பெற்றிருக்கின்றார்கள். மீனவர்களை போன்று வேடம் இட்டு கடல் வழியாக இலங்கைக்கு கட்டம் கட்டமாக மீண்டும் வந்து சேர்ந்து இருக்கின்றார்கள். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தாக்குதல்களை நடத்த திடசங்கற்பம் பூண்டு இருக்கின்றார்கள்.

0 comments:

Post a Comment