
, அம்முயற்சி தாயின் கவனத்தால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.இச்சம்பவம் கடந்த சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் வடமராட்சி, துன்னாலை வடக்கு பகுதியிலுள்ள ஒரு கோயில் ஒன்றிற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,குறித்த பிள்ளையின் தாயாரான பெண் இறுதியாக வன்னி யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இரண்டு கால்களையும் இழந்தவராவார். இவர் தனது இரண்டரை வயது ஆண் பிள்ளையுடன் வடமராட்சியிலுள்ள தனது பெரியம்மாவின் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.சம்பவ தினத்தன்று சென்ற இருவர், தாயின் பெயரையும் பெரியம்மாவின் பெயரை கூறி, ஈ.பி.டி.பி யின் வடமராட்சி அமைப்பாளர் ரங்கேஸ்வரன் அழைத்து குழந்தையை அழைத்து வரச் சொன்னதாக தெரிவித்துள்ளனர்.ஆயினும், தாய் அவர்கள் பேரில் சந்தேகம் கொண்டதோடு தன்னுடைய பிள்ளையை ஏன்? கொடுக்க வேண்டும் என்றும் கூறி வீட்டின் உள்ளே சென்று தொலைபேசியில் அழைப்பு எடுக்க ஈ.பி.டி.பி. அமைப்பாளர் ஸ்ரீரங்கேஸ்வரனைத் தொடர்பு கொண்டு எனது மகனை கூட்டி வருமாறு இரண்டு பேரை எனது வீட்டிற்கு அனுப்பினீர்களா? எனக் கேட்டுள்ளார். அதற்கு ஈபிடிபி அமைப்பாளர் அவ்வாறு யாரையும் அனுப்பவில்லை? எதற்காக நான் மகனைக் கூப்பிடுகிறேன்? எனக் கேட்ட போது இங்கு இரண்டு பேர் உங்கள் பெயரைச் சொல்லி மகனைக் கூட்டிப் போக வந்துள்ளனர் எனக் கூறியுள்ளார்.அவர்களிடம் உங்கள் மகனை அனுப்ப வேண்டாம் என அமைப்பாளர் தெரிவித்து அங்கு வருகிறேன் எனக் கூறியுள்ளார். இந்த தொலைபேசிப் பேச்சுக்களை அவதானித்த மர்ம நபர்கள் இந்தச் சந்திக்கு வாறன் எனச் சொன்னவர் எனக் கூறிக்கொண்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இதனையடுத்து, இச்சம்பவம் தொடர்பில் குறித்த பெண் பருத்தித்துறை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments:
Post a Comment