அஜித் குமார் நடித்துள்ள “பில்லா 2” திரைப்படத்தின் முன்னோட்டக்காட்சி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து மெகாஹிட் ஆன திரைப்படம் பில்லா. பின்பு கடந்த 2007ம் ஆண்டு அஜித்குமார் நடிப்பில் மீண்டும் திரைக்கு வந்தது. இரண்டாவது முறையும் அபார வெற்றி பெற்றதால் 2012ம் ஆண்டில் பில்லா 2 வாக திரைக்கு வரவுள்ளது. இப்படத்தில் இருவேடங்களில் நாயகன் அஜித்குமார் நடிக்கிறார். அஜித்திற்கு ஜோடியாக மலையாள அழகி பார்வதி ஒமணக்குட்டன் இணைந்துள்ளார். பில்லா 2 படத்தை ஷக்ரி டோலட்டி இயக்கியுள்ளார். ஐரோப்பா, ரஷ்யா என உலகின் அதிமுக்கியமான பகுதிகளில் பில்லா 2 திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் நடைபெற்றுள்ளது. எதிர்வருகிற மே 2ம் வாரத்தில் பில்லா 2 திரைப்படம் ரசிகர்களுக்கு விருந்தாக வரவுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் வெளியிடப்பட்ட முன்னோட்டக்காட்சி பில்லா 2 படத்தின் பிரமாண்டத்தையும், வெற்றியையும் முன்கூட்டியே தெரிவிக்கக்கூடியவையாக அமைந்துள்ளது.
0 comments:
Post a Comment