Monday, April 2, 2012

சாவகச்சேரியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரின் சடலம் மீட்பு! கொலை என சந்தேகம்


சாவகச்சேரி கல்வயல் பகுதியிலிலுள்ள வெற்றுக்காணியிலிருந்து தூக்கி தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவருடைய சடலம் ஒன்றை பொலிஸார் நேற்று மீட்டுள்ளனர்.
பூநகரியைச் சேர்ந்த நந்தகுமார் சுரேஸ் வயது 30  என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.
நேற்று முன்தினம் தனது சகோதரியின் வீட்டிற்கு இவர் சென்றுள்ளார். பின்னர் அடுத்த நாளான நேற்று அருகிலள்ள வெற்றுக்காணியிலுள்ள வேப்பமரத்தில் இறுதியாக அவர் அணிந்திருந்த உடையுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவரது சடலம் தூக்கில் தொங்கினாலும் இவரது முழங்கால்கள் நிலத்தை தொட்டபடி உள்ளதால் இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments:

Post a Comment