Sunday, April 1, 2012

மீண்டும் தூத்துக்குடி - கொழும்பு கப்பல்சேவை ஆரம்பம்

தமிழ்நாட்டின் தூத்துக்குடி- கொழும்பு இடையே மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படுவதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. 

நிதிநெருக்கடி காரணமாக ரத்துச்செய்யப்பட்டிருந்த இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்துச் சேவை மீண்டும் எதிர்வரும் 19ஆம் திகதி முதல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

இதற்காகச் சிறிய ரக கப்பல்கள் இயக்கப்படும் என்று தூத்துக்குடி துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் சுப்பையா இன்று தமிழ்நாடு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment