அமெரிக்க டொலருக்கான இலங்கை நாணயத்தின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சியடைவதைத் தடுக்க கடந்த வாரம் இலங்கை அரசு முயற்சிகளை எடுத்திருந்த போதும் அது பெரிதும் வெற்றி பெறவில்லை.
கடந்த மாதம் அமெரிக்க டொலர் ஒன்று 111 ரூபாவாக குறைந்தது. கடந்த 19 ஆம் திகதி அமெ.டொலர் ஒன்றுக்கு எதிராக 131.60 ரூபா என்ற நிலையை எட்டியது. இந்நிலையில் டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதியை 125 ரூபாவாக நிலைநிறுத்த இலங்கை அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இதையடுத்து கடந்த வாரத் தொடக்கத்தில் தளம்பலான நிலையே காணப்பட்டது.
டொலருக்கான இலங்கை நாணயத்தின் பெறுமதி கடந்த வியாழன் 127.60 ரூபாவாக உயர்ந்தது. ஆனால் நேற்று முன்தினம் மாலை வர்த்தக முடிவின் போது இலங்கை நாணயப் பெறுமதி மேலும் சரிந்து டொலருக்கான மதிப்பு 128.30 ரூபா என்ற நிலையை அடைந்தது. இதனால் ரூபாவின் மதிப்பைக் குறைக்கும் இலங்கை அரசின் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது எனத் தெரிகிறது

0 comments:
Post a Comment