Saturday, March 31, 2012

வினோத விளையாட்டில் ஈடுபடும் தம்பதிகள்! (அருமையான காணொளி, படங்கள் இணைப்பு)

திருமாணமான தம்பதிகள் என்றாலே புது உத்வேகத்துடன் தான் இருப்பார்கள் என்பது யாவரும் அறிந்த விடயம். இருந்தும் சிலரது வீட்டில் தாலி ஏறியதும் சந்தோசம் இறங்கியவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்
.ஆனால் 29 வயதான தம்பதிகள் இருவர் வினோத விளையாட்டு மூலம் தமது வாழ்க்கையை சுவாரஸ்யமாக கொண்டு செல்கின்றனர். அதாவது வீட்டில் இருக்கும் சந்தர்ப்பங்களில் ஏதாவது ஒரு மென்மையான பொருளைக்கொண்டு ஒருவர் முகத்தில் ஒருவர் மாறிமாறி எறிந்து விளையாடுவார்களாம்.திருமாணமாகி 5 வருடங்களாகின்றன. எனினும் இந்தப்பாரம்பரிய விளையாட்டை தொடர்ந்தவண்ணம் உள்ளனராம் என்றால் பாருங்களேன்.குறிப்ப - இப்படியான விளையாட்டுக்களில் ஈடுபட நீங்களும் ஆர்வமாக இருக்கலாம். எனினும் கவனம் சட்டி, பானைகள் கூட பதம்பார்க்கலாம்












மீண்டும் தென்பட்ட பறக்கும் பொருள்? வேற்றுக் கிரக வாசிகளா? பரபரப்பு வீடியோ இணைப்பு

இது ஒரு பறவையா? அல்லது விமானமா? அல்லது ஏதேனும் பறக்கும் வேற்றுக் கிரக வாசிகளா? இந்தச் சந்தேகம் இந்த நிமிடம் வரை தொடர்ந்து கொண்டு தான்
இருக்கின்றது.பிரித்தானியாவின் Yorkshire பிராந்தியத்தில் தான் இந்த அதிசய பறக்கும் பொருள் தென்பட்டுள்ளது.திகைப்பூட்டும் முக்கோண வடிவிலான இந்த பறக்கும் பொருள் கடந்த ஐந்து வருடங்களில் நான்கு முறை தென்பட்டுள்ளது.இந்த பறக்கும் பொருள் தொடர்பான காணொளியானது ஒரு புகைப்படக் கலைஞர் ஒருவரால் எடுக்கப்பட்டு Youtube இல் பதிவேற்றப்பட்டுள்ளது.திடீரென வானில் தென்பட்ட கறுப்பு நிறத்தில் அமைந்த முக்கோண வடிவ பொருள் பற்றி விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றார்கள்.


கார் ஓட்டுகையில் நினைத்தவுடன் கோப்பி! புதிய இயந்திரம் அறிமுகம்

ஒரு சிறிய கற்பனை.. நீங்கள் நிறைய நேரமாக போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிர்க்கிறீர்கள்? சி.டி பிளேயரும் வேலை செய்யவில்லை... கடும் குளிரான காலநிலையும் வேறு... என்ன செய்வீர்கள்... ஆம், உடனே சூடாக ஒரு கோப்பி குடித்தால் எப்படி இருக்கும் என்று நினைப்பீர்கள்.தேநீரைப் போல கோப்பிக்கும் அடிமையான நிறையப் பேர் இருக்கின்றார்கள். இப்படியாக கோப்பிக்கு அடிமையான வாகன ஓட்டுனர்களுக்காக பிரத்தியேகமாக கோப்பி தயாரிக்கும் மிஷின் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.காரின் முன் பக்கத்தில் பொருத்தப்பட்டிருக்கும் இந்த இயந்திரம் மூலம் இரண்டே நிமிடங்களில் சூப்பரான கோப்பி தயாரித்து விடலாம். பயன்படுத்துவது மற்றும் காரில் பொருத்துவது மிக எளிதானது.பயன்படுத்துவோர் முன்னதாகவே தண்ணீரை விட்டு விட வேண்டும். புத்துணர்வான வாசனையுடன் கிடைக்கும் இந்த கோப்பி இயந்திரம் மலிவான விலையில் கடைகளில் கிடைக்கிறது.இனி என்ன காரில் போகும் போதே கோப்பி குடித்துக்கொண்டே இருக்கலாம். என்ன நீங்களும் ரெடியா?



நிர்வாண கோலத்தில் சிக்கிய கல்லூரி ஜோடிகள்...

நாகர்கோவிலில் இருந்து சொத்தவிளை செல்லும் சாலையில் ஏராளமான முந்திரி தோட்டங்கள் உள்ளன.இந்த தோட்டங்களில் ஆள் இல்லாத நேரங்களில் சில இளம் ஜோடிகள் அத்துமீறி நுழைவதாகவும், அவர்கள் ஆபாச சேட்டைகளில் ஈடுபடுவதாகவும் புகார்கள் கூறப்பட்டு வந்தது. இது அப்பகுதி மக்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.தோட்டங்கள் புகுந்து சில்மிஷத்தில் ஈடுபடுபவர்களை பிடித்து போலீசில் ஒப்படைக்க முடிவு செய்தனர். சம்பவத்தன்று இப்பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றிற்கு ஆண்களும், பெண்களும் வேலைக்குச் சென்றனர்.அப்போது தோப்பில் உள்ள ஒரு மரத்தில் பேண்ட் சட்டையும், சுடிதாரும் தொங்கியது. இதைப்பார்த்த மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் நேராக ஊருக்குள் சென்று மக்களை திரட்டி வந்தனர். பின்னர் பொதுமக்கள் ஏராளமானோர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு 2 வாலிபர்களும், 2 இளம்பெண்களும் அரைகுறை ஆடையுடன் நின்றனர்.மக்களை பார்த்த வாலிபர்களும், இளம்பெண்களும் ஓட்டம் பிடித்தனர். எனினும் பொதுமக்கள் அவர்களை மடக்கிப்பிடித்தனர். அவர்களிடம் விசாரித்தபோது இளம்பெண்கள் இருவரும் கன்னியாகுமரி பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், நாகர்கோவில் அருகே உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருவதும், வாலிபர்கள் இருவரும் அதே கல்லூரியில் படித்து வருவரும் தெரியவந்தது.


இவர்கள் இதுபோல பலமுறை இங்கு வந்து உல்லாசத்தில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசில் ஒப்படைக்க பொதுமக்கள் முடிவு செய்தனர்.அப்போது பிடிபட்ட 4 பேரும் நாங்கள் தெரியாமல் தவறு செய்து விட்டோம், இனிமேல் இதுபோன்ற தவறை செய்யமாட்டோம் என கண்ணீர் விட்டனர். மேலும் போலீஸ் நிலையம் சென்றால் தங்கள் படிப்பு பாழாகி விடும் என கூறி கதறி அழுதனர். கடைசியில் அவர்களை எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பொதுமக்கள் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்


  

மீண்டும் சந்தித்த மகிழ்ச்சியில் எஜமானரான இராணுவ வீரர் மீது பாசமழை பொழியும் நாய்!


இந்த நாயானது இணையத்தில் செம ஹிட் ஆகியுள்ளது. இராணுவ வீரரான தனது எஜமான் கடமை முடிந்து வீட்டுக்கு வரும் போது கட்டித் தழுவி அன்புடன் வரவேற்கின்றது
இந்த நாய்.2,210,325 க்கும் மேற்பட்ட மக்கள் எஜமானை ஆசையுடன் வரவேற்கும் நாயின் வீடியோவைப் பார்த்துள்ளனர்.ஐரோப்பாவில் உள்ள கடற்படைத் தலைமையகத்தில் இருந்து வந்த இராணுவ வீரரைத் தான் இப்படி பாசமழை பொழிந்து வரவேற்றது இந்த நாய்.எட்டு மாதங்களுக்கு மேல் அந்த நாய் எஜமானரான இராணுவ வீரரைப் பிரிந்து இருந்ததாம்.யார் சொன்னது விலங்குகளுக்கு ஐந்து அறிவு என்று...?






Chennai girl is Miss India International 2012

Chennai girl, Rochelle Maria Rao won the Femina Miss India International, 2012 crown. This student of MOP Vaishnav college is also the younger sister of SS music channel veejay, Paloma. Rochelle
also won the VLCC Miss Body Beautiful, 2012, Gitanjali Femina Miss Glamourous Diva, 2012, and Liberty Femina Miss Ramp Model titles.Rochelle has done Chennai proud. Before Miss India happened, Rochelle distinguished herself as a model and anchor. She is currently preparing for her next International beauty pageant and after that like her predecessors before her, she may just decide to take the silver screen by storm.

பள்ளியைக் கட் அடித்துவிட்டு இன்டர்நெட் பார்த்த மகனின் கழுத்தில் சங்கிலியால் கட்டிய தகப்பன்...

பொதுவாக நம்மூர்களில் தான் இப்படி கொடூரமான தண்டனைகளை வழங்கும் அப்பாக்கள் இருக்கிறார்கள்.ஆனால் மேலை நாடுகளிலும் இவ்வாறு இருக்கின்றார்கள் என்பது தான் ஆச்சரியத்தைத் தருகின்றது.


தனது மகனின் கழுத்தில் சங்கிலியால் போட்டு பிணைத்து ஆமைப் பூட்டுப் போட்டு பூட்டி வைத்த தகப்பன் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.பாடசாலைக்குச் செல்லாமல் கட் அடித்து விட்டு கொம்பியூட்டர் கேம் விளையாடிய தனது 13 வயதேயான மகனை சங்கிலியால் கட்டி வைத்து தண்டனை கொடுத்துள்ளார் குறித்த கோபக்காரத் தந்தை.கம்போடியாவில் தான் மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.இரண்டு மணிநேரங்களுக்கும் மேலாக தண்டனையை அனுபவித்த சிறுவனை அயலவர்கள் பொலிஸாரின் உதவியுடன் மீட்டனர்.பொலிஸார் குறித்த சிறுவனின் கழுத்தில் இருந்த ஆமைப்பூட்டை உடைத்து சங்கிலிப் பிணைப்பை நீக்கியுள்ளனர்.குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் பேச்சாளரான Cheth Vanny கருத்துத் தெரிவிக்கையில்,பாடசாலைக்குச் செல்லாமல் இன்டர்நெட் கபேக்கு சென்றதைக் கண்ட தகப்பன் கடும் கோபமாகி விட்டார்.பொதுமக்கள் முன்னிலையில் இவனுக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும் என்று கருதிய தகப்பன் இவ்வாறு பூட்டுப் போட்டுப் பூட்டியுள்ளார்.ஆனால் அதற்காக இப்பியான தண்டனைகளை ஏற்றுக் கொள்ள முடியாது. இவை சிறுவர் துஷ் பிரயோகத்துக்குள் உள்ளடங்குகின்றன.


 

சிறுவர்களின் சிறுநீரின் மகிமையைப் பார்த்தீர்களா?


சிறுவர்களின் சிறுநீரைப் பயன்படுத்தி அவிக்கப்படும் முட்டை சீன மக்கள் மத்தியில் பாரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.இம்முட்டைகளை அவிப்பதற்கான நீரைச்
சேகரிப்பதற்காக தெருவோர வியாபாரிகள் பாத்திரங்களுடன் சிறுவர்கள் அதிகம் இருக்கும் பாடசாலை போன்ற பிரதேசங்களுக்கு அலைகின்றனராம்.



இலங்கை அகதி மீது அவுஸ்திரேலிய அகதி முகாமில் கடும் தாக்குதல்...


அவுஸ்திரேலியாவின் தென்மேற்கு சிட்னி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வில்லாவூட் அகதிகள் முகாமிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.இவ்வகதி முகாமில் காவல் கடமையில் ஈடுபட்டுள்ள சேர்கோ என்ற நிறுவனத்தின் காவலாளியினாலேயே குறித்த நபர் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இச்சம்பவத்தினை வில்லாவூட் அகதி முகாம் ஆலோசனைக் குழுவொன்று வெளிப்படுத்தியுள்ளது.அதேவேளை, இந்த தாக்குதல் சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ள அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்களம், ஒரு நபர் மாத்திரம் சிகிச்சைகளுக்கென வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.இத் தாக்குதல் சம்பவம் பற்றி அவுஸ்திரேலியாவின் அகதி அதிரடிக் கூட்டணிக் கட்சியின் இயன் ரின்டோல் கருத்துத் தெரிவிக்கையில், இந்த தாக்குதல் சம்பவத்துடன் சேர்கோ எனப்படும் பாதுகாப்பு நிறுவனத்தில் 20 காவலாளிகள் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் அதில் 5 அல்லது 6 பேர் நேரடி தொடர்புபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர், இன்று (31) காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் இலங்கை அகதி சித்திவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் உடலில் காயங்கள் ஏற்பட்டு அவர் அதிர்ச்சியில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இன்று அதிகாலை 1.30 அளவில் குறித்த இலங்கையர் அம்பியூலன்ஸ் வண்டி மூலம் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அவருடைய தலை, முகம், கழுத்து, கை மற்றும் கால்களில் காயங்கள் காணப்படுவதாகவும் மேலும் அவர் கூறியுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான குறித்த இலங்கை அகதி தற்போது லிவர்பூல் வத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

21 பிள்ளைகள் பெற்ற தாய்க்கு ஜனாதிபதி விருது!


21 பிள்ளைகளை பெற்ற தாய்க்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ விருது வழங்கிக் கௌரவித்து உள்ளார்.


பலாங்கொடயைச் சேர்ந்த எச். எம். பொடி நோனா என்பவருக்கே அபிமன் மாதா என்கிற ஜனாதிபதி விருது கிடைக்கப் பெற்று உள்ளது.

இவ்விருது வழங்கல் வைபவத்தில் அமச்சர்களான ஜோன் செனவிரட்ண மற்றும் பவித்ரா வன்னியாராச்சி, சப்ரகமுவா மாகாண ஆளுனர் லொக்கு பண்டார ஆகியோர் உட்பட பிரமுகர்கள் பலரும் பங்கேற்று இருந்தனர்.

புலிகள் வீழ்த்திய விமானங்கள்! ரஷ்யாவின் ஏவுகணைகளாலே!! கண்டுபிடித்தது இலங்கை!!

இலங்கையின் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் அரசுக்கும் இடையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது அரசுக்குச் சொந்தமான 8 விமானங்களைப் புலிகள் அழித்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.
அதாவது அரசின் உலங்குவானூர்திகள் மற்றும் விமானங்களை விடுதலைப்புலிகள் ரஷ்யாவில் இருந்து கொள்வனவு செய்த ஏவுகணைகள் மூலமே அழித்துள்ளதாகவும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதுவரை காலமும் இயந்திரக் கோளாறு காரணமாகவே மேற்படி விமானங்கள் விழுந்து நொருங்கியதாக விமானப் படையினர் எண்ணியிருந்தனர்.எனினும் புலிகளின் பதுங்குகுழிகளில் இருந்த ஏவுகணைகளின் வெற்றுத் தோட்டாங்கள் மூலமே புலிகள்தான் இவ் விமானங்களை வீழ்த்தியது அம்பலமாகியுள்ளது. இந்த ரஷ்ய ஏவுகணைகளைப் பயன்படுத்தி விடுதலைப்புலிகள் 1998 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் லயன் எயார் விமானத்தின் மீது புலிகள் தாக்குதல் நடத்தியிருந்தனர்.இதேவேளை 2000 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் திகதி அன்ரனோவ் விமானத்தை தாக்கிய இரண்டு பேர் கடந்த 26 ஆம் திகதி பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால், அனுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியிருந்தனர். இவர்கள் மேலும் இரண்டு விமானங்கள் மீது தாக்குதல் நடத்தயிருப்பதாகவும், வில்பத்து வனத்தில் மறைத்திருந்து இவர்கள் இந்த தாக்குதலை நடத்தியிருப்பதாகவும் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.புலிகளின் ஏவுகணை பிரிவுக்கு பொறுப்பாக இருந்தாக கூறப்படும் கடாபி என்பவர், திறமையாக துப்பாக்கிச் சூடு நடத்தக் கூடியவர் எனவும் சுவரில், துப்பாக்கியால் சுட்டு தனது பெயரை தோட்டக்களில் பதிவுசெய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இவரே விமானப்படையினருக்கு சொந்தமான விமானங்கள் பலவற்றை வீழ்த்தியுள்ளார்.எவ்வாறாயினும் போரின் இறுதிக்கட்டத்தில், கடாபி கொல்லப்பட்டதாக கைதுசெய்யப்பட்ட புலி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கை வேகப்பந்து வீச்சாளர் வெலகேத்ரா விலகல்

இங்கிலாந்து அணிக்கெதிரான 2வது டெஸ்ட் போட்டியிலிருந்து இலங்கை வேகப்பந்து வீச்சாளர், சனாகா வெலகேத்ரா காயம் காரணமாக விலகியுள்ளார்.
இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது.
காலே மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்டின்போது இடுப்பில் காயம் ஏற்பட்டது.
இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பு மைதானத்தில் ஏப்ரல் 3ம் திகதி தொடங்க உள்ள நிலையில், காயம் குணமடையாததால், தொடரில் இருந்து விலகுவதாக வெலகேத்ரா அறிவித்துள்ளார்.
அவருக்கு பதிலாக, வலதுகை வேகப் பந்து வீச்சாளர் சமின்டா இரங்கா சேர்க்கப்பட்டுள்ளார்.
அதேபோல, இங்கிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்டுக்கும் வலது காலில் காயம் ஏற்பட்டதால் 2வது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார். எனவே அவர் உடனடியாக நாடு திரும்புகிறார். இதனால் ஐபிஎல் தொடரிலும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக அவர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சச்சின் ஓய்வு பெற்றால் அவரது இடத்தை நிரப்புவது கடினம்: கில்கிறிஸ்ட்

சச்சின் ஓய்வு பெற்றால் அவரது இடத்தை மற்றொரு வீரர் ஈடு செய்வது என்பது கடினமான விடயம் என்று அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான சச்சின் டெண்டுல்கர் ஆசிய கிண்ண தொடரில், 100வது சதமடித்து சாதனை படைத்தார்.
இதனையடுத்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் ரசிகர்கள், ஊடகங்கள் என்று பலதரப்பினரும் சச்சினை பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் சச்சினின் சத சாதனை குறித்து அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஆடம் கில்கிறிஸ்ட் கூறுகையில், சச்சினின் 100வது சதம் என்ற சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது, சச்சினின் சதங்களின் எண்ணிக்கையை, மற்ற வீரர்களின் சதங்களுடன் ஒப்பிட்டு பார்த்தால் அவரின் மிகப்பெரிய சாதனை புரியும் என்றார்.
கிரிக்கெட் போட்டிகளில் 100 சதங்களை அடித்துள்ள சச்சினுக்கு அடுத்து 2வது இடத்தில் உள்ள ரிக்கி பொண்டிங் 71 சதங்களை அடித்தபோதும், 29 சதங்கள் இடைவெளியில் உள்ளார். எனவே சச்சினின் 100வது சத சாதனையை யாராலும் எட்ட முடியாது.
கடந்த 22 ஆண்டுகளாக சச்சின் ஒரே சீராக விளையாடி வருகிறார். அதன்மூலம் சச்சினின் பலம் என்ன என்பதை புரிந்து கொள்ள முடியும். அவர் தற்போதும் நல்ல நிலையில் உள்ளார்.
சச்சின் அணியிலிருந்து ஓய்வு பெற்றால் அவரது இடத்தை இன்னொரு வீரர் நிரப்புவது என்பது கடினமானது, மேலும் வீரட் கோஹ்லி போன்று இளம் வீரர்கள் அணியில் இருக்கும் போது ரசிகர்கள் கவலை கொள்ள தேவையில்லை என்றும் கூறினார்.

Birthday celebratio​ns of father Selva at Jaffna

114th birthday of father Selva celebrated at the Jaffna and Killinochchie districts today.Father Selva was describe has father of SriLankan Gandhi.
Politicians and several  political analysts  were also present at this event.Officials garland the statue of father Selva at 9am this morning.Parliamentarians Suresh Premachandran, C.Sridharan anf former parliamentarians M.K.Sivajilingam, Sidhrathan and Ananda Sangari were also present at this special event.

President to advice foreign ambassadors countries which supported and against Lanka at Geneva

President Mahinda Rajapaksa has decided to advise the ambassadors of 24 nations with supported and against the US resolution submitted against the country at the UN Human Rights Council session in Geneva.According to the External Affairs Ministry sources, all these ambassadors schedule to visit SriLanka during the period of Sinhala Tamil New year and hold special individual discussions with president Rajapaksa this regard.Ambassadors from America, Switzerland, Norway, Spain, India, Hungary , Czech , Poland, Moldova, Rumania, Belgium, Italy. Austria, Moscow, Peru, Uruguay, Costa Rica, Guatemala, Chilly, Nigeria, Benny, Libya and Mauricio’s, sources said.

பேஸ்புக்கி​ல் படங்களை முழுத்திரை​யில் பார்ப்பதற்​கு

நண்பர்கள் வட்டத்தை பெருக்குவதில் முன்னணி வகிக்கும் சமூகத்தளமான பேஸ்புக்கில் பகிரப்படும் படங்களை முழு அளவிலான திரையில் பார்ப்தற்கான வசதி தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக Google+ photo viewer இனை மேம்படுத்திய பதிப்பான Revamped Photo Veiwer எனும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் படங்களை சாதாரண அளவில் இருந்து நான்கு மடங்கு பெரிதானதாக பார்வையிட முடியும். எனினும் இது பயன்படுத்தப்படும் கணணியின் திரையை பொறுத்து வேறுபடலாம்.
இதனை இரு முறைகளில் செயற்படுத்தலாம்.
முறை 1: பேஸ்புக் பக்கத்தில் உள்ள படம் ஒன்றை கிளிக் செய்யவும், பின் அதன் மேல் சுட்டியை(mouse) அழுத்தியவாறு வலது, இடது அம்புக்குறி விசைகளை(keys) அழுத்துக.
அப்போது படத்தின் வலதுபக்க மேல் மூலையில் இரண்டு தலைகளைக் கொண்ட அம்புக்குறி வடிவம் தோன்றும். அதன் மேல் அழுத்தியதும் குறித்த படம் முழுத்திரை அளவிற்கு பெரிதாகும்.
முறை 2: பெரிதாக்க வேண்டிய படத்தின் மேல் கிளிக் செய்து பின் அப்படத்தின் கீழ் காணப்படும் option பொத்தானை அழுத்தி அதில் காணப்படும் Enter Fullscreen என்பதை தெரிவு செய்வதன் மூலம் குறித்த படத்தை பெரிதாக்க முடியும்.

இதயத்தை பலமாக்கும் எலுமிச்சை

காலையில் எழுந்த உடன் மிதமான வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிடுவது ஆரோக்கியமானது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
உடலில் ஜீரணமண்டத்தை சீராக்குவதோடு, இதய நலனையும் பாதுகாக்கிறது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.
வெந்நீரில் எலுமிச்சை கலந்து சாப்பிடுவதால் அதில் உள்ள சிட்ரஸ் அமிலம் உடல் ஆரோக்கியத்தை பேணுகிறது.
இதில் உள்ள வைட்டமின் சி சரும அழகை பாதுகாக்கிறது. முகத்தை புத்துணர்ச்சியாக்குவதோடு இளமையை மீட்டெடுக்கிறது. அத்துடன் எடைக்குறைப்பிலும் முக்கிய பங்காற்றுகிறது. இது ஜீரணமண்டலத்தை சீராக்குகிறது.
உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய சக்தி எலுமிச்சம் பழத்தில் உள்ளது. எனவே தினசரி வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிடுவதால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்கிறது. அது தவிர இது ஆன்டிசெப்டிக் போல செயல்பட்டு உடலில் காயங்களை ஆற்றுகிறது.
எலுமிச்சை சாறு பானம் இதயநோயாளிகளுக்கு வரப்பிரசாதமாகும். இதில் உள்ள உயர்தர பொட்டாசியம் இதயத்தை பலமாக்குகிறது.
எனவே தினசரி காலையில் வெந்நீரில் எலுமிச்சை கலந்து பருகுவது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு திறவு கோலாகும் என்கின்றனர் மருத்துவர்கள்.

கிராபிக்ஸ் வேலைகளை இலகுபடுத்து​ம் கூகுள் குரோமின் புதிய பதிப்பு

இணைய உலாவிகளின் வரிசையில் முன்னணி வகிக்கும் கூகுள் குரோமின் புதிய பதிப்பை அதன் நிறுவனமான கூகுள் வெளியிட்டுள்ளது.
18வது பதிப்பாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த உலாவியில் கிராபிக்ஸ் வேலைகளை இலகுபடுத்தும் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதாவது இதுவரை காலமும் இருபரிமாண கிராபிக்ஸ் வேலைகளை ஓன்லைனில் செய்யும் போது கணணியின் மத்திய முறைவழியாக்கல் அலகின்(CPU) தொழிற்பாடு அதிகமாக காணப்பட்டது.
ஆனால் புதிய பதிப்பில் இப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளதுடன் முப்பரிமாண கிராபிக்ஸ் வேலைகளையும் இலகுவாக செய்துகொள்ள முடியும். மேலும் பழைய கணணிகளிலும் விரைவாக செயற்படக்கூடியது.
தற்போதுள்ள கூகுள் குரோமை புதிய பதிப்பிற்கு மாற்றுவதற்கு அதன் விண்டோவின் வலது மூலையில் காணப்படும் குறடு(wrench) வடிவிலான ஐகனை அழுத்தி அதில் காணப்படும் About Google Chrome என்பதை தெரிவு செய்யவும். சில நொடிகளில் தானாகவே புதிய பதிப்பிற்கு அப்டேட் ஆகிவிடும்

ஆரோக்கியமான பற்களுக்கு

ஆரோக்கியமான பற்களே ஆரோக்கியமான வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன என்கின்றது மருத்துவ உலகம்.
பண்டைய காலத்தில் பல் போனால் சொல் போச்சு என்ற பழமொழி உண்டு.
இன்றைக்கு பற்கள் பாதிக்கப்பட்டால் இதயம், பக்கவாதம் போன்ற நோய்களும் எட்டிப்பார்க்கும் என்கின்றனர் மருத்துவர்கள். எனவே பற்களை ஆரோக்கியமாக பாதுகாக்க வேண்டியது அவசியம்.
சிறு வயதில் இருந்தே பல்லை ஆரோக்யமாக வைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். பிரச்னை வந்து, வலிக்க ஆரம்பித்த பின்னர் தான் மருத்துவரைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணமே பலருக்கும் உள்ளது.
குழந்தைகளுக்கு பல் முளைக்க ஆரம்பித்ததில் இருந்தே தினமும் இருமுறை பல்துலக்க வேண்டும். பல்லின் இடுக்குகளில் உணவுப் பொருள்கள் படியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு சிக்கிக் கொண்டால் வாய் கொப்பளித்து உடனடியாக பல்லை சுத்தம் செய்ய வேண்டும்.
கீரைகளை நன்றாக மென்று துப்பலாம். இதனால் பல் இடுக்குகளில் உள்ள உணவுப்பொருட்கள் வெளியேறிவிடும், பற்கள் ஆரோக்கியமடையும்.
பச்சை வெங்காயத்தை மூன்று நிமிடம் நன்றாக மென்று துப்ப வாய், பற்களில் உள்ள தேவையற்ற கிருமிகள் இறந்துவிடும். உணவு உண்டவுடன் வெதுவெதுப்பான நீரில் ஹைட்ரஜன் பெராக்ஸைடு சேர்த்து நன்றாக கொப்பளிக்க வேண்டும்.
சத்துக் குறைபாடான உணவுகள் மற்றும் உடலில் ஏற்படும் சர்க்கரை உள்ளிட்ட மற்ற நோய்களின் காரணமாகவும் பல் ஆரோக்கியம் விரைவில் கெட்டுவிட வாய்ப்புள்ளது. எச்சிலில் உள்ள அமிலம் மற்றும் உணவில் உள்ள கார்போஹைட்ரேட்டும் சேர்ந்து பல்லில் சொத்தையை உருவாக்குகிறது.
தினசரி உணவில் கால்சியம், வைட்டமின் சி போன்றவைகளை அதிகம் சேர்த்துக் கொள்வது பற்களின் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். தினசரி அரை எலுமிச்சையை சாறு எடுத்து வெதுவெதுப்பான நீரில் கொப்பளிக்கலாம்.
பல் சொத்தை பெரிதாக வளர்ந்து பல்லின் வேரை தாக்கும் போது தான் வலி ஏற்படுகிறது. இந்த வலியை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால் பல்லின் வேர்ப்பகுதி முழுவதும் பாதிக்கப்பட்டு பல்லை முழுமையாக இழக்கும் நிலை ஏற்படும்.
பல்வலி ஏற்பட்டால் அந்த இடத்தில் சிறிதளவு வெள்ளைப் பூண்டை எடுத்து பல் வலிக்கும் இடத்தில் வைக்க நிவாரணம் கிடைக்கும். அதேபோல் கிராம்பு பொடி செய்து பல்வலி உள்ள இடத்தில் வைக்கலாம். வெள்ளைப் பூண்டு, கல் உப்பு சேர்த்து நன்றாக பல் தேய்க்க பல்வலி குணமாகும்.
தினசரி நன்றாக பல்துலக்க வேண்டும். வாய், நாக்கு உள்ளிட்ட இடங்களில் அழுக்குகளை நீக்க வேண்டும். கொத்தமல்லி இலைகளை நன்றாக மென்று சாறுகளை விழுங்கலாம்.

வெதுப்பான நீரில் ஒரு டீ ஸ்பூன் இஞ்சி, ஒரு டீ ஸ்பூன் எலுமிச்சை ஜூஸ் சேர்த்து நன்றாக கொப்பளிக்க வேண்டும். தினசரி மூன்று முறை இவ்வாறு செய்யலாம். சுவாசப் புத்துணர்ச்சி கிடைக்கும்.
இதேபோல் பல்லில் ஏற்படும் பல் கூச்சம், ஈறு வீக்கம், பல் சொத்தை, வாய் நாற்றம் உள்ளிட்ட எந்தப் பிரச்னையாக இருந்தாலும் உடனடியாக பல் மருத்துவரை அணுகி சிகிச்சை செய்து கொள்வதன் மூலம் பல்லின் ஆரோக்யத்தையும், உடல் ஆரோக்கியத்தையும், அழகையும் பாதுகாக்க முடியும்.

USB Disk security 6.0.1 பதிப்பை தரவிறக்கம் செய்ய

பென்டிரைவ்களில் இருந்து கணணிக்கு வைரஸ், மால்வேர் போன்றவை வராமல் தடுப்பதற்கு USB Disk security மென்பொருள் பயன்படுகிறது.
இந்த மென்பொருளின் இலவச பதிப்பு சில சிறப்பம்சங்களை மட்டுமே ​கொண்டிருக்கும். இம் மென்பொருளை உங்கள் கணணியில் நிறுவுவதன் மூலம் உங்கள் கணணிக்கு பென்டிரைவ்களினால் வரக்கூடிய Virus, maliciousகளின் தாக்கத்தை தவிர்த்து கொள்ளலாம்.
மேலும் உங்கள் கணணியை பாதுகாப்பதற்கு இதனை பதிவேற்றம் வேண்டிய அவசியம் இல்லை. எனவே பொறுத்தப்படாத கணணிகளிலும் இம் மென்பொருளை பயன்படுத்த முடியும்.
அனைவரும் இலகுவாக பயன்படுத்தக்கூடிய வகையில் இம் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ரத்த சோகையை கட்டுப்படுத்தும் உணவுகள்

ரத்த சோகை மிகவும் பரவலாக காணப்படும் நோயாக மாறி வருகிறது. ஊட்டச்சத்துள்ள, இரும்புச்சத்துள்ள உணவுகளை சாப்பிடாத காரணத்தினாலேயே இந்த நோய் ஏற்படுகிறது.
ரத்த சோகை ஏற்பட பல காரணங்கள் இருக்கின்றன. முதல் காரணம் ரத்தம் அதிக அளவில் வெளியேறிக் கொண்டே இருப்பது.
விபத்து தவிர இதற்கு வேறு சில காரணங்களும் இருக்கின்றன. ரத்த சிவப்பணுக்கள் தொடக்கம் சீராக இல்லாத நிலையில் ரத்த சோகை உண்டாகும்.
வலுவற்ற, பாதிக்கப்பட்ட எலும்பு மஜ்ஜையினாலும் ரத்த சோகை உண்டாகும். ரத்த சிவப்பணுக்கள் இறந்து போவதால் ரத்த சோகை ஏற்படும்.
ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் இரும்பு சத்துள்ள கீரைகளை முருங்கைக்கீரை, அரைக் கீரை, ஆரைக் கீரை, புதினா, கொத்த மல்லி, கறிவேப்பலை, அகத்திக் கீரை, பொன்னாங் கண்ணி கீரை போன்ற கீரைகளையும் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திராட்சை, பேரீட்சை, உலர்ந்த திராட்சை, பப்பாளி, அத்திப் பழம், மாம்பழம், பலா பழம், சப்போட்டா ஆப்பிள், நெல்லிக்கனி போன்ற பழங்களையும் தினமும் கொடுத்து வருவது நல்லது. இதனால் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
இதனால் ரத்தம் விருத்தி அடைந்து ரத்த சோகை நீங்கும். மேலும் முளைகட்டிய பச்சை பயறு, முந்திரி பருப்பு, பாதாம், பிஸ்தா பருப்பு போன்றவை அதிகம் உணவில் சேர்த்து வருவது நல்லது. காய்கறி சாலட்டுகள் அடிக்கடி கொடுப்பது நல்லது.
பீட்ரூட் காய்கறியில் உயர்தர இரும்புச்சத்து அடங்கியுள்ளது. இதனை உட்கொள்ளும் போது அது அதிக அளவு ஹீமோகுளோபினை உற்பத்தி செய்கிறது.
ரத்த உற்பத்தியும் அதிகரிக்கிறது. அன்றாட உணவில் பீட்ரூட் சேர்த்துக் கொள்வது அவசியம் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். அத்துடன் வைட்டமின் சி சத்து அடங்கிய காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் இரும்புச்சத்து உடலில் கிரகித்துக் கொள்ளப்படும்.
இரும்புச்சத்து அதிகம் உள்ள மாமிசம், பாதம் கொட்டை, உருளைக்கிழங்கு போன்றவைகளையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். இதன் மூலம் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மேலும் அனிமீயா ஏற்பட வாய்ப்பில்லை.

விரல்களினூ​டு அவதானித்து புகைப்படம் எடுக்கும் நவீன கருவி

சாதாரண கமெராக்களில் புகைப்படம் எடுக்கும் போது உள்ளடக்கப்பட வேண்டிய காட்சியின் அளவு அதில் காணப்படும் வில்லையினூடாக அவதானித்து தீர்மானிக்கப்படும்.
ஆனால் தற்போது இரு கைகளின் விரல்களையும் பயன்படுத்தி காட்சியின் அளவை தீர்மானிக்கும் Ubi-Camera என்ற புதிய வகை கமெரா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த Ubi-Camera ஜப்பானில் தயாரிக்கப்பட்டுள்ளது. Infrared தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கருவியின் மூலம் சாதாரண கமெராக்களினால் செய்யக்கூடிய அத்தனை செயற்பாடுகளையும் மேற்கொள்ள முடியம்.