Tuesday, March 13, 2012

கூகுல் அறிமுகப்படுத்தியுள்ள நடமாடும் கட்டணம் செலுத்தும் முறை (VIDEO இணைப்பு)

நாளுக்கு நாள் புத வசதிகளை அள்ளி வழங்கும் கூகுல் புதிய திட்டம் ஒன்றை நடைமுறைப்படத்தியுள்ளது. Google wallet எனும் நடமாடும் கட்டணம் செலுத்தும் முறையொன்றை Google

 அறிமுகப்படுத்தியுள்ளது. வசந்த காலத்தில் அறிமுகப்படுத்தப்படவிருந்த இந்த சேவை முன்கூட்டியே அறிமுகமாகியுள்ளது.கைத்தொலைபேசியை பணம் செலுத்த பயன்படுத்தும் முறையே இதுவாகும். NFC எனப்படும் Near-Field Communication தொழில்நுட்பமே இதன்போது பயன்படுத்தப்படுகின்றது. Sprint Nexus S 4G கைத்தொலைபேசியையும், City MasterCards அல்லது Visa Card களை உபயோகிப்போர் இந்த வசதியைப்பெறலாம். google wallet , பல கடனட்டைகளை ஒன்றிணைத்தல், சிறந்த வாடிக்கையாளர் நலத்திட்டங்கள், விலைக்கழிவுகள் என பல சிறப்பம்சங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த சேவையைப்பெறுவதற்கு google wallet ஐ google கணக்கொன்றுடன் இணைக்க வேண்டும். பின்னர் உங்கள் கடனட்டைகளை wallet கணக்குடன் இணைத்து பயன்படுத்தலாம். Discover மற்றும் American Express கடனட்டைகளையும் இந்த சேவையில் பயன்படுத்தலாமென google அறிவித்துள்ளது.

0 comments:

Post a Comment