நடிகர் வடிவேலுக்கு எதிராக அவதூறான குற்றச்சாட்டுக்களை பதிவு செய்ய ஓய்வு பெற்ற வங்கி அதிகாரிக்கு, சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.
சென்னை, தாம்பரம் - முடிச்சூர் சாலையில், 34 சென்ட் நில விவகாரம் தொடர்பாக, நடிகர் வடிவேலு மீது, ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி பழனியப்பன் என்பவர், சென்னை புறநகர் பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.ஏற்கனவே,.
இந்த நிலம் குறித்து தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம், வடிவேலுக்கு விற்பனை செய்த நபர்கள் மற்றும் வடிவேலுக்கு எதிராக பழனியப்பன் தொடுத்த வழக்கு, செங்கல்பட்டு மாவட்ட கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.இதையடுத்து, தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செய்திகள் கொடுத்ததால், பழனியப்பன் மற்றும் அவரது மகன் சொக்கலிங்கத்துக்கு எதிராக ஐகோர்ட்டில், நடிகர் வடிவேலு மனு தாக்கல் செய்தார்.மூன்று கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டும், தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதத்தில் அவதூறான குற்றச்சாட்டுக்களை பத்திரிகைகள், மீடியாக்களுக்கு அளிக்க பழனியப்பன், சொக்கலிங்கத்துக்கு தடை விதிக்கவும் கோரியிருந்தார்
மனுவை நீதிபதி பெரியகருப்பையா விசாரித்தார்.வடிவேலுக்கு எதிராக அவதூறான, பொய்யான குற்றச்சாட்டுக்களை பத்திரிகைகள், மீடியாக்களில் தெரிவிக்க, பழனியப்பன் மற்றும் சொக்கலிங்கத்துக்கு, நீதிபதி பெரிய கருப்பையா இடைக்கால தடை விதித்தார். இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டு, விசாரணையை 28ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

0 comments:
Post a Comment