Wednesday, March 21, 2012

யாழில் சிறுமி பாலியல் வல்லுறவு: சந்தேக நபருக்கு இருவாரங்களுக்கு விளக்கமறியல்

சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிபதி மா.கணேசராச உத்தரவிட்டுள்ளார்
பாலியல் குற்றப் புகாரின் பேரில் விளக்கமறியலில் ஒருவார காலமாக வைக்கப்பட்டு இருந்த இந்நபர் தொடர்பான வழக்கு இன்று புதன்கிழமை யாழ்.நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது.

சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் இருந்த 13 வயதுடைய ஒரு சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சந்தேகத்தில் இவ் கோப்பாய் பொலிஸாரினால கைது செய்யப்பட்டிருந்தார்.

பாதிக்கப்பட்ட சிறுமி சார்பாக சட்டத்தரணிகளான எஸ்.சுகாஸ் மற்றும் அபிமன்யூ ஆகியோர் ஆஜராகியிருந்தனர்

சந்தேக நபர் தரப்பில் சட்டத்தரணி என். சிறிகாந்தா, மு.றெமிடியஸ், சர்மினி விக்னேஸ்வரன் ஆகியோர் ஆஜராகியிருந்தனர். இவர்கள் மூவரும் அவரை பிணையில் விடுதலை செய்யுமாறு மன்றில் கோரினர்.

இதேவேளை குறிக்கிட்ட கோப்பாய் பொலிஸ் நிலைய அதிகாரி சந்தேக நபருக்கு எதிரான குற்றச்சாட்டு பாரதூரமானது என்றும் அவருக்குப் பிணை அனுமதி வழங்கப்பட்டால் சமூகத்தில் அமைதி குலைவு ஏற்படலாம் என்பதுடன் சந்தேக நபர் சாட்சிகளுடன் அவர் தலையீடு செய்வதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும் இதனால் இவரைப் பிணையில் செல்ல அனுமதிக்கக் கூடாது எனவும் இருவாரங்கள் விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸார் கோரினர்

அதனை அடுத்து சந்தேக நாரை இரு வாரங்களுக்கு விளக்க மறியலில் வைக்குமாறு யாழ்.நீதிமன்ற நீதிபதி மா. கணேசராச உத்தரவிட்டார்.

0 comments:

Post a Comment