Saturday, March 31, 2012

இலங்கை அகதி மீது அவுஸ்திரேலிய அகதி முகாமில் கடும் தாக்குதல்...


அவுஸ்திரேலியாவின் தென்மேற்கு சிட்னி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வில்லாவூட் அகதிகள் முகாமிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.இவ்வகதி முகாமில் காவல் கடமையில் ஈடுபட்டுள்ள சேர்கோ என்ற நிறுவனத்தின் காவலாளியினாலேயே குறித்த நபர் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இச்சம்பவத்தினை வில்லாவூட் அகதி முகாம் ஆலோசனைக் குழுவொன்று வெளிப்படுத்தியுள்ளது.அதேவேளை, இந்த தாக்குதல் சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ள அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்களம், ஒரு நபர் மாத்திரம் சிகிச்சைகளுக்கென வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.இத் தாக்குதல் சம்பவம் பற்றி அவுஸ்திரேலியாவின் அகதி அதிரடிக் கூட்டணிக் கட்சியின் இயன் ரின்டோல் கருத்துத் தெரிவிக்கையில், இந்த தாக்குதல் சம்பவத்துடன் சேர்கோ எனப்படும் பாதுகாப்பு நிறுவனத்தில் 20 காவலாளிகள் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் அதில் 5 அல்லது 6 பேர் நேரடி தொடர்புபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர், இன்று (31) காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் இலங்கை அகதி சித்திவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் உடலில் காயங்கள் ஏற்பட்டு அவர் அதிர்ச்சியில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இன்று அதிகாலை 1.30 அளவில் குறித்த இலங்கையர் அம்பியூலன்ஸ் வண்டி மூலம் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அவருடைய தலை, முகம், கழுத்து, கை மற்றும் கால்களில் காயங்கள் காணப்படுவதாகவும் மேலும் அவர் கூறியுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான குறித்த இலங்கை அகதி தற்போது லிவர்பூல் வத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

0 comments:

Post a Comment