இங்கிலாந்து அணிக்கெதிரான 2வது டெஸ்ட் போட்டியிலிருந்து இலங்கை வேகப்பந்து வீச்சாளர், சனாகா வெலகேத்ரா காயம் காரணமாக விலகியுள்ளார்.


இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது.
காலே மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்டின்போது இடுப்பில் காயம் ஏற்பட்டது.
இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பு மைதானத்தில் ஏப்ரல் 3ம் திகதி தொடங்க உள்ள நிலையில், காயம் குணமடையாததால், தொடரில் இருந்து விலகுவதாக வெலகேத்ரா அறிவித்துள்ளார்.
அவருக்கு பதிலாக, வலதுகை வேகப் பந்து வீச்சாளர் சமின்டா இரங்கா சேர்க்கப்பட்டுள்ளார்.
அதேபோல, இங்கிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்டுக்கும் வலது காலில் காயம் ஏற்பட்டதால் 2வது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார். எனவே அவர் உடனடியாக நாடு திரும்புகிறார். இதனால் ஐபிஎல் தொடரிலும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக அவர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.














0 comments:
Post a Comment