கிரிக்கெட் சபை அபிவிருத்தி அணிக்கு எதிராக இடம்பெற்றுவரும் 3 நாள் போட்டியின் முதல்நாள் முடிவில் இங்கிலாந்து அணி கடுமையான அழுத்தத்தை எதிர்கொண்டு வருகிறது. இன்றைய நாள் ஆட்டமுடிவில் இலங்கைக் கிரிக்கெட் சபை அபிவிருத்தி அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 376 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கைக் கிரிக்கெட் சபை அபிவிருத்தி அணி முதலாவது ஓவரிலேயே தனது முதலாவது விக்கெட்டை இழந்தது. ஆரம்பத்துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கிய இலங்கை அணியின் முன்னாள் டெஸ்ட் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் மலிந்த வர்ணபுர ஓட்டதெமனையும் பெறாமல் ஆட்டமிழந்தார்.
மற்றுமொரு ஆரம்பத்துடுப்பாட்ட வீரரான டில்ஷான் முனவீர 19 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்கும் போது இலங்கை கிரிக்கெட் சபை அபிவிருத்தி அணி 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.
அதன் பின்னர் ஜோடி சேர்ந்த மூன்றாமிலக்கத்தில் களமிறங்கிய சாமர சில்வா மற்றும் அணித்தலைவர் திலின கண்டம்பி ஜோடி, இங்கிலாந்துப் பந்துவீச்சாளர்களைத் துவம்சம் செய்தது. குறிப்பாக சாமர சில்வா மிக வேகமாக ஓட்டங்களைக் குவித்தார்.
இரண்டு வீரர்களும் இணைந்து 151 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பகிர்ந்த வேளையில் 64 ஓட்டங்களைப் பெற்றிருந்த திலின கண்டம்பி ஆட்டமிழந்தார். அதன் பின்னர் இணைந்த அன்ஜலோ பெரேரா, சாமர சில்வா ஜோடி 93 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றது. 180 பந்துகளில் 25 நான்கு ஓட்டங்கள், ஒரு ஆறு ஓட்டம் அடங்கலாக 163 ஓட்டங்களைப் பெற்றிருந்த சாமர சில்வா ஆட்டமிழக்க, பின்னர் களமிறங்கிய கௌசல் பெரேரா 35 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
இறுதியாக கௌசல்ய லொக்கு ஆராச்சி மற்றும் அன்ஜலோ பெரோ ஜோடி மேலதிக இழப்புகளின்றி இன்றைய நாள் ஆட்டத்தை நிறைவுசெய்தது. அன்ஜலோ பெரேரா ஆட்டமிழக்காமல் 61 ஓட்டங்களையும், கௌசல்ய லொக்கு ஆராச்சி 22 ஓட்டங்களை ஆட்டமிழக்காமலும் பெற்றனர்.
பந்துவீச்சில் இங்கிலாந்து அணியின் பிரதம பந்துவீச்சாளரான ஜேம்ஸ் அன்டர்சனுக்கு ஓய்வு வழங்கப்பட்டிருந்த நிலையில் பந்துவீச்சை தலைமை தாங்கிய ஸ்ருவேர்ட் ப்ரோட் 3 விக்கெட்டுக்களையும், ஸ்ரிவன் ஃபின், சமித் பட்டேல் இருவரும் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இங்கிலாந்து அணியின் பிரதம சுழற்பந்து வீச்சாளர் கிரேம் ஸ்வான் 21 ஓவர்கள் பந்துவீசி, 102 ஓட்டங்களை விட்டுக் கொடுத்த போதிலும் விக்கெட்டுக்களைக் கைப்பற்றத் தவறியிருந்தார்.
இலங்கை அணியின் சகலதுறை வீரர் அன்ஜலோ மத்தியூஸின் உடற்தகுதி தொடர்பான சந்தேகம் நிலவும் நிலையில், இலங்கை அணி சார்பாக முதலாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் வாய்ப்பு சாமர சில்வாவிற்கு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சாமர சில்வா தான் இறுதியாகத் துடுப்பெடுத்தாடிய 12 இனிங்ஸ்களில் 142*, 158, 63, 76, 0, 98, 57, 216, 64, 86, 108, 163 என்றவாறான ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

0 comments:
Post a Comment