ஒரு சிறிய கற்பனை.. நீங்கள் நிறைய நேரமாக போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிர்க்கிறீர்கள்? சி.டி பிளேயரும் வேலை செய்யவில்லை... கடும் குளிரான காலநிலையும் வேறு... என்ன செய்வீர்கள்... ஆம், உடனே சூடாக ஒரு கோப்பி குடித்தால் எப்படி இருக்கும் என்று நினைப்பீர்கள்.தேநீரைப் போல கோப்பிக்கும் அடிமையான நிறையப் பேர் இருக்கின்றார்கள். இப்படியாக கோப்பிக்கு அடிமையான வாகன ஓட்டுனர்களுக்காக பிரத்தியேகமாக கோப்பி தயாரிக்கும் மிஷின் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.காரின் முன் பக்கத்தில் பொருத்தப்பட்டிருக்கும் இந்த இயந்திரம் மூலம் இரண்டே நிமிடங்களில் சூப்பரான கோப்பி தயாரித்து விடலாம். பயன்படுத்துவது மற்றும் காரில் பொருத்துவது மிக எளிதானது.பயன்படுத்துவோர் முன்னதாகவே தண்ணீரை விட்டு விட வேண்டும். புத்துணர்வான வாசனையுடன் கிடைக்கும் இந்த கோப்பி இயந்திரம் மலிவான விலையில் கடைகளில் கிடைக்கிறது.இனி என்ன காரில் போகும் போதே கோப்பி குடித்துக்கொண்டே இருக்கலாம். என்ன நீங்களும் ரெடியா?
0 comments:
Post a Comment