இலங்கையின் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் அரசுக்கும் இடையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது அரசுக்குச் சொந்தமான 8 விமானங்களைப் புலிகள் அழித்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.
அதாவது அரசின் உலங்குவானூர்திகள் மற்றும் விமானங்களை விடுதலைப்புலிகள் ரஷ்யாவில் இருந்து கொள்வனவு செய்த ஏவுகணைகள் மூலமே அழித்துள்ளதாகவும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதுவரை காலமும் இயந்திரக் கோளாறு காரணமாகவே மேற்படி விமானங்கள் விழுந்து நொருங்கியதாக விமானப் படையினர் எண்ணியிருந்தனர்.எனினும் புலிகளின் பதுங்குகுழிகளில் இருந்த ஏவுகணைகளின் வெற்றுத் தோட்டாங்கள் மூலமே புலிகள்தான் இவ் விமானங்களை வீழ்த்தியது அம்பலமாகியுள்ளது. இந்த ரஷ்ய ஏவுகணைகளைப் பயன்படுத்தி விடுதலைப்புலிகள் 1998 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் லயன் எயார் விமானத்தின் மீது புலிகள் தாக்குதல் நடத்தியிருந்தனர்.இதேவேளை 2000 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் திகதி அன்ரனோவ் விமானத்தை தாக்கிய இரண்டு பேர் கடந்த 26 ஆம் திகதி பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால், அனுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியிருந்தனர். இவர்கள் மேலும் இரண்டு விமானங்கள் மீது தாக்குதல் நடத்தயிருப்பதாகவும், வில்பத்து வனத்தில் மறைத்திருந்து இவர்கள் இந்த தாக்குதலை நடத்தியிருப்பதாகவும் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.புலிகளின் ஏவுகணை பிரிவுக்கு பொறுப்பாக இருந்தாக கூறப்படும் கடாபி என்பவர், திறமையாக துப்பாக்கிச் சூடு நடத்தக் கூடியவர் எனவும் சுவரில், துப்பாக்கியால் சுட்டு தனது பெயரை தோட்டக்களில் பதிவுசெய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இவரே விமானப்படையினருக்கு சொந்தமான விமானங்கள் பலவற்றை வீழ்த்தியுள்ளார்.எவ்வாறாயினும் போரின் இறுதிக்கட்டத்தில், கடாபி கொல்லப்பட்டதாக கைதுசெய்யப்பட்ட புலி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.

0 comments:
Post a Comment