சிரியாவின் மீது உலக நாடுகள் தொடர் அழுத்தங்களை கொடுத்து வருவதால்,அரசு ஆதரவாளர்களின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளது.சிரியாவில் கடந்த ஓராண்டாக ஜனாதிபதி பஷர் அல் அசாத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆயுதம் ஏந்திய போராட்டக்காரர்களுக்கு மேற்கத்திய நாடுகளும் அண்டை நாடுகள் சிலவும் ஆதரவு அளித்து வருகின்றன. இதனால் நாட்டின் ஒரு சில இடங்களில் அவர்கள் வலுப் பெற்றனர். எனினும் அரசு எதிர்ப்பாளர்கள் இடையே பிரிவினையும் உள்ளது.இந்நிலையில் தாரா நகர் மீது இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இது தொடர்பாக தாரா நகரில் வசிக்கும் அபு அகமது என்பவர் செய்தி நிறுவனம் ஒன்றிடம் தொலைபேசியில் கூறுகையில், ராக்கெட் குண்டு விழுந்ததால் எங்கள் வீட்டில் சிலர் இறந்து விட்டனர்.வெளியே சென்றால் நிச்சயம் மரணம் என்ற நிலைதான் உள்ளது. எனவே வீட்டுக்குள் பதுங்கியிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.இராணுவத்தினரின் இந்த தாக்குதலால் அரசு எதிர்ப்பாளர்கள் நிலைகுலைந்து விட்டதாகவே தெரிகிறது. எனினும் அவர்களை அரசுக்கு எதிராக ஒருங்கிணைக்க மேற்கத்திய நாடுகள் முயற்சிப்பதாகத் தெரிகிறது.சிரியாவில் இராணுவத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. இது மிகவும் அவசரப்பட்ட நடவடிக்கை. இது உள்நாட்டுப் போரை ஏற்படுத்தும். இதனால் அப்பாவி பொதுமக்கள்தான் அதிகம் உயிரிழப்பார்கள் என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கூறியுள்ளார்.முன்னதாக எதிர்ப்புப் படையினருக்கு உதவி செய்வது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் அமெரிக்கா தெரிவித்திருந்தது. அசாத் ஒரு கொலைகாரர் என்று பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோஸி கண்டனம் தெரிவித்துள்ளார்.அதே நேரத்தில் ரஷ்யா, சிரியா ஜனாதிபதி பஷர் அல் அசாத்துக்கு ஆதரவாகவே உள்ளது. சிரியாவில் வன்முறையை எப்படி கட்டுப்படுத்துவது என்பது குறித்து சர்வதேச சமூகம் யோசிக்க வேண்டுமென்று ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Friday, March 16, 2012
Home »
Feature
,
Popular
,
World
» சிரியாவில் இராணுவத்தின் தாக்குதல்கள் அதிகரிப்பு: வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் மக்கள்...












0 comments:
Post a Comment