Saturday, March 10, 2012

ஆயிரம் விளக்கு

வைத்தெல்லாம் மகனை தேடுகிறார். ஆனால், இவர் பெயரைக் கேட்டாலே விழுந்தடித்து ஓடுகிறார்கள். இந்நிலையில் தான் தேடும் தகுதிகள் கொண்ட சாந்தனுவை கண்டுபிடிக்கிறார். அவரோ, லிங்கத்தின் வலதுகரம் என்ற பொய் பந்தாவுடன் வலம் வருபவர். வேறொரு பெயரில் சாந்தனுக்கு அறிமுகமாகி அவரது அன்புக்கு பாத்திரமாகிறார் சத்யராஜ். இவருக்கு அவர் உதவி செய்ய, அவருக்கு இவர் உதவி செய்ய என்று பாசப்பயிர் வளர்கிறது. சத்யராஜின் எதிரியான சுமன், சத்யராஜை போட்டுத்தள்ள நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார். இப்போது சாந்தனுவும் அவருடன் சேர்ந்து விட்டதால் அவரையும் போட்டுத்தள்ள திட்டம்போடுகிறார். மீண்டும் சத்யராஜ் ஆயுதத்தை எடுத்தால் என்கவுன்டர் செய்ய பொலிஸ் காத்திருக்கிறது. ஆனால் சாந்தனுவுக்காக அவர் ஆயுதம் எடுக்க வேண்டிய நிலையும் வருகிறது அடுத்து என்ன நடக்கிறது என்பது மீதிக்கதை. வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை, விக்கு வைக்காத தலை என்று ரவுடி லிங்கமாகவும், அப்பாவி கண்ணாயிரமாகவும் தனக்கு கொடுத்த வேலையை சத்யராஜ் சரியாக செய்திருக்கிறார். ஆங்காங்கே சில காட்சிகளில் தனது முந்தைய படங்களையும் ஞாபகப்படுத்துகிறார். சாந்தனு கோபால் என்ற கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். ஃபைட், காமெடி, காதல், செண்டிமென்ட் என அனைத்திலும் அசத்தியிருக்கும் சாந்தனுவுக்கு ஆக்ஷன் சப்ஜெக்ட்டும் பொருந்தும் என்பது புரிகிறது. அவ்வப்போது பாக்யராஜ் போல நடித்து காட்டுகிறார். என்னதான் பாக்யராஜ் அவருடைய அப்பாவாக இருந்தாலும், அவர் நடிக்கிற படங்களில் எல்லாம் இப்படி செய்வது போரடிக்கிறது. சனாகான் உதட்டை குவித்து காதல் வசனம் பேசுவது, சாந்தனு நல்லவர் என்பதை உணர்ந்து ஓடிவந்து கட்டிப்பிடித்து காடு மலையெங்கும் டூயட் பாடுவது என ஹீரோயின் கடமையைச் செய்கிறார். ஆனால் வடக்கத்திய முகத்துடன் இருக்கும் அவருக்கு மதுரை வழக்கு டப்பிங் கொடுத்திருப்பதுதான் கொடுமை. சுமன், சதா சத்யராஜை கொல்ல திட்டமிடுகிறார் கத்தி கத்தி வசனம் பேசுகிறார். இறுதியில் பொசுக்கென்று செத்துப்போகிறார். லிங்கம் நல்லவன்பா, நான் கமிஷனரா இருக்கிற வரைக்கும் அவன் வன்முறையில இறங்க மாட்டான். அப்படி இறங்கினா, என்கவுன்டர்ல போடுறேன் என்று பொலிஸ் பணிக்கு புதிய பரிமாணம் கொடுத்து கொமெடி பண்ணுகிறார் 'பிதாமகன்' மகாதேவன். 'நாயகன்' படத்தில் கமலுக்கு உதவியாய் இருப்பது போல, இப்படத்தில் சத்யராஜிற்கு உதவியாளராய் வந்து போகிறார் டெல்லி கணேஷ். கஞ்சா கருப்பு, தீப்பெட்டி கணேசன் ஆகியோரின் கொமெடி காட்சிகள் சில இடங்களில் சிரிக்க வைக்கின்றன. சில இடங்களில் எரிச்சலூட்டுகின்றன. லிங்கத்தை முன்னபின்ன பார்க்காத சாந்தனு, அவருடைய வலது கை நான் தான் என்று ரீல் விடும் காட்சிகள் சுவாரஸ்யமாக இருந்தாலும், படம் முழுக்க சாந்தனுவுடன் சுற்றும் லிங்கத்தை யாருக்கும் தெரியாமல் இருப்பது சலிப்பு தட்டுகிறது. கவிப்பேரரசு வைரமுத்து இப்படத்தின் அத்தனை பாடல்களையும் எழுதியிருக்கிறார். ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் 'மதுர மதுர' பாடல் தாளம் போட வைக்கிறது. 'என்ன தவம்' பாடலில் கே.ஜே.யேசுதாஸின் குரல் நம் மனதை பதம்பார்க்கிறது. மற்ற பாடல்களும் கேட்கும் ரகம். கண்ணனின் ஒளிப்பதிவு கதையோடு நகர்ந்திருக்கிறது. தாதாவுக்கு ஏற்படும் மகன் பாசம் என்ற ஒன்லைன் ஒ.கே. ஆனால் திரைக்கதையாக்கி இருக்கும் விதத்திலும், படமாக்கியிருக்கும் விதத்திலும் வெளிச்சம் இல்லை. ஊரே நடுங்கும் தாதாவை ஊருக்குள் யாருக்கும் தெரியவில்லை, தான் தந்தையாக பாவிக்கும் ஒருவர், விருந்தினர் போல தினமும் வந்து போவதைப் பற்றி சாந்தனு கவலைப்படவில்லை. சத்யராஜ் மீது பாசம் பொழிபவர் உயிருக்கு போராடும் அவரது கற்பனை மகனை பார்க்க வேண்டும் என்று கூட நினைக்கவில்லை.

Click Here

0 comments:

Post a Comment