Saturday, March 10, 2012

தொழிலுக்கு வயதில்லை'- பிரிட்டனில் சட்டம்


பிரிட்டனில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து படிப்டிப்படியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக ஒருவர் தொழிலொன்றிலிருந்து ஓய்வுபெற வேண்டிய (65 வயது) சட்ட ரீதியானவயது உச்ச வரம்பு முற்று முழுதாக நீக்கப்பட்டுவிட்டது. ஒருவர் 65 வயதை அடைந்தவுடன் வயதைக் காரணம் காட்டி அவரை தொழிலிருந்து நீக்குவதற்கு தொழில் வழங்குநருக்கு இருந்த அதிகாரத்தை இந்தப் புதிய சட்டம் இத்துடன் ஒழித்துவிட்டது. ஆனாலும், பிரிட்டனில் உள்ள தொழில் ஸ்தாபனங்களில் பத்தில் ஒரு நிறுவனம், ஊழியர்களை குறித்த ஒரு வயதில் ஓய்வு பெறச் செய்வதற்காக ஊக்குவிப்பு சலுகைகளை வழங்குவதாக நோர்ட்டன் ரோஸ் என்ற சட்ட நிறுவனமொன்று நடத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த புதிய சட்டத்தை வரவேற்றுள்ள ஏஜ் யூகே என்ற தன்னார்வ நிறுவனமொன்று, ஆனாலும் வேலைத்தளங்களில் வயதை மையமாகக்கொண்ட பாரபட்சங்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறது என்று சுட்டிக்காட்டியிருக்கின்றது. ஊழியர்களுக்கு ஓய்வு பெறுமாறு வழங்கும் நோட்டிசுகளை ஆறு மாதத்துக்கு குறைந்த காலத்துக்குள் வழங்க முடியாது, ஒருவரை ஓய்வு பெறச் செய்வதானால் அது கம்பனிக்கு நியாயமாக அவசியப்படுகிறது என்பதை உறுதிப்படு்த்த வேண்டும் போன்ற நிபந்தனைகள் 6 மாதங்களுக்கு முன்னர் பிரிட்டனில் அமுலுக்கு வந்தன.எவரையும் வயதைக் காரணங்காட்டி ஓய்வு பெறுமாறு வற்புறுத்துவது இனி பிரிட்டனி்வயது ரீதியான பாரபட்சம் என்ற சட்டப் பிரச்சனையை ஏற்படுத்திவிடும்.

0 comments:

Post a Comment