பெண்களுக்கு சட்டவிரேதமான முறையில் கருக்கலைப்பு செய்வதற்கு உதவி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்ட விரோதமான முறையில் கருக்கலைப்பு செய்வதற்கு உதவி செய்ததாக, சந்தேகத்தின் பெயரில் இளைஞர் ஒருவரை யாழ்.பொலிஸார் நேற்று கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞனை யாழ்.நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் ஆஜர் படுத்திய போது, இவரைப் பிணையில் விடுதலை செய்யுமாறு சந்தேக நபர் தரப்பு வழக்குரைஞர் மு.றெமிடியஸ் வாதிட்டார்.
எனினும், சந்தேக நபரைப் பிணையில் செல்ல கடும் ஆட்சேபனை தெரிவித்து, பிணையில் செல்ல அனுமதியளித்தால் பல பெண்களுக்கு கருக்கலைப்பு செய்வார் என யாழ்.பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமன் சிகேரா மன்றில் தெரிவித்தார்.
இதனை அடுத்து, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட யாழ்.நீதிமன்ற நீதவான் மா.கணேராசா, சந்தேக நபரை ஏப்ரல் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் உத்தரவிட்டுள்ளார்.












0 comments:
Post a Comment