Wednesday, March 21, 2012

யாழ். குடாக் கடலை மேவும் நடவடிக்கை ஆரம்பம்

யாழ்.குடா கரையோரப் பகுதிகளான குரநகர், பாஷையூர், கொழும்புத்துறை மற்றும் நாவாந்துரை பகுதிகளில் உள்ள கடற்கரை பகுதியை 100 மீற்றர் வரை மணலினால் நிரப்பும்
 நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ்.பிரதேச செயலகம் இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளது.

யாழ்.குடாமக்களின் போக்குவரத்திற்காக கரையேரப்பகுதிகளில் வீதி அகலிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக கடலை மேவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுடன் அப்பகுதியில் மக்களின் போக்குவரத்திற்காக புதிய வீதிகள் அமைக்கப்படவுள்ளன.

இந்த கடல் மேவும் நடவடிக்கையின் காரணமாக மக்களின் போக்குவரத்துக்கள் இலகுபடுத்தப்படும்; என யாழ்.பிரதேச செயலகம் அறிவித்துள்ளது

0 comments:

Post a Comment