பொலன்னறுவை மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் இருவர் துணை மருந்தாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக
இன்று காலை உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கூறினார்.
இந்நோயாளிகளுக்கான சோதனைகள் உரிய நேரத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்தால் அவர்களை காப்பாற்றியிருக்க முடியும் என வைத்தியசாலைகளின் ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்
அதேவேளை, சாதாரண நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சுமார் 400 நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் மருந்துகள் வழங்கப்படாமை மற்றும் சோதனைகள் மேற்கொள்ளப்படாமை காரணமாக பாரதூரமான நிலைக்குள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்தார்.












0 comments:
Post a Comment