சச்சின் ஓய்வு பெற்றால் அவரது இடத்தை மற்றொரு வீரர் ஈடு செய்வது என்பது கடினமான விடயம் என்று அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான சச்சின் டெண்டுல்கர் ஆசிய கிண்ண தொடரில், 100வது சதமடித்து சாதனை படைத்தார்.
இதனையடுத்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் ரசிகர்கள், ஊடகங்கள் என்று பலதரப்பினரும் சச்சினை பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் சச்சினின் சத சாதனை குறித்து அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஆடம் கில்கிறிஸ்ட் கூறுகையில், சச்சினின் 100வது சதம் என்ற சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது, சச்சினின் சதங்களின் எண்ணிக்கையை, மற்ற வீரர்களின் சதங்களுடன் ஒப்பிட்டு பார்த்தால் அவரின் மிகப்பெரிய சாதனை புரியும் என்றார்.
கிரிக்கெட் போட்டிகளில் 100 சதங்களை அடித்துள்ள சச்சினுக்கு அடுத்து 2வது இடத்தில் உள்ள ரிக்கி பொண்டிங் 71 சதங்களை அடித்தபோதும், 29 சதங்கள் இடைவெளியில் உள்ளார். எனவே சச்சினின் 100வது சத சாதனையை யாராலும் எட்ட முடியாது.
கடந்த 22 ஆண்டுகளாக சச்சின் ஒரே சீராக விளையாடி வருகிறார். அதன்மூலம் சச்சினின் பலம் என்ன என்பதை புரிந்து கொள்ள முடியும். அவர் தற்போதும் நல்ல நிலையில் உள்ளார்.
சச்சின் அணியிலிருந்து ஓய்வு பெற்றால் அவரது இடத்தை இன்னொரு வீரர் நிரப்புவது என்பது கடினமானது, மேலும் வீரட் கோஹ்லி போன்று இளம் வீரர்கள் அணியில் இருக்கும் போது ரசிகர்கள் கவலை கொள்ள தேவையில்லை என்றும் கூறினார்.












0 comments:
Post a Comment