1991ஆம் ஆண்டு வெளியான மன்னன் திரைப்படத்துக்கு பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் குரலில் பாடலொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. கோச்சடையான
திரைப்படத்துக்காக இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சுமார் 21 வருடங்களின் பின்னர் இந்தப் பாடலை பாடியுள்ளார் சூப்பர் ஸ்டார்.
மன்னன் திரைப்படத்தில் 'அடிக்குது குளிரு...' என்ற பாடலை எஸ்.ஜானகியுடன் இணைந்து பாடினார் ரஜினி. அந்தப் பாடலுக்கு இசை இளையராஜா. இத்தனை ஆண்டுகளில் பல முறை அவரை பாடுமாறு பல இசையமைப்பாளர்கள் வற்புறுத்தியும் சம்மதிக்காமல் இருந்தார் ரஜினி, இப்போது தனது அடுத்த படமான கோச்சடையானுக்காகப் பாடியுள்ளார்.
செவ்வாய்க்கிழமை நடந்த இந்தப் பாடல் பதிவின்போது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், பாடலை எழுதிய கவிஞர் வைரமுத்து, இயக்குநர் சௌந்தர்யா ஆகியோர் உடன் இருந்துள்ளனர். மிக மகிழ்ச்சியுடன் இந்தப் பாடலை அவர் பாடிக் கொடுத்ததாக இசையமைப்பாளர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

.jpg)
.jpg)
.jpg)

0 comments:
Post a Comment