Wednesday, March 21, 2012

யாழில் இராணுவ சாகச பயிற்சியில் விபத்து, மூன்று இராணுவ வீரர்கள் படுகாயம்

யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கில் இராணுவ வீரர்களின் சாகச நிகழ்ச்சிக்கான பயிற்சியின்போது வாகன விபத்தில் சிக்கி படுகாயமடைந்த மூன்று இராணுவ வீரர்கள் யாழ்.போதனா வைத்திய சாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ். இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்

இன்று புதன்கிழமை மாலை தினம் இடம்பெற்ற இராணுவ வாகன சாகச நிகழ்வில் அதிவேகமாக வாகனத்தை செலுத்தும் போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழில் எதிர்வரும் 23, 24, 25 ஆகிய தினங்களில் யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கில் இராணுவ வீரர்களின் சாகச நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இது தொடர்பான பயிற்சிகள் இன்று புதன்கிழமை நடைபெற்றன.

0 comments:

Post a Comment