Tuesday, March 20, 2012

அவுஸ்திரேலிய குயின்ஸ்லாந்து மாநிலத்தை தாக்கிய புயல் (காணொளி இணைப்பு) _

அவுஸ்திரேலிய குயின்ஸ்லாந்து மாநிலத்தில் அமைந்துள்ள டவுஸ்விலி நகரைத் தாக்கிய புயலினால் அங்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.

இப் புயலினால் அந்நகரில் அமைந்துள்ள வீடுகள் பலவற்றின் கூரைகள் மற்றும் மதில்கள் சேதமடைந்துள்ளதுடன், மரங்கள் பலவும் சாய்ந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இதன் காரணமாக 25 முதல் 30 வரையான வீடுகள் சேதமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மின் விநியோக கம்பிகள் அறுந்து வீதிகளில் வீழ்ந்துள்ளமையால் சுமார் 7000 வீடுகளுக்கான மின் விநியோகம் தடைப்பட்டுள்ளதுடன் அங்குள்ளவர்களை வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி அதிகரிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

மேலும் அப்பகுதியில் கடுமையான காலநிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

0 comments:

Post a Comment